என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Rekha Gupta"

    • குண்டுவெடிப்பில் 13 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
    • காயமடைந்தவர்களுக்கு ரூ. 2 லட்சமும் வழங்கப்படும் என்றும் ரேகா குப்தா தெரிவித்தார்.

    டெல்லி செங்கோட்டை அருகே நடந்த கார் வெடிப்பில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு டெல்லி முதல்வர் ரேகா குப்தா நிவாரண நிதியை அறிவித்துள்ளார்.

    தலைநகர் டெல்லியில் செங்கோட்டை அருகே நேற்று முன் தினம் மாலை 6.52 மணியளவில் மெட்ரோ ரெயில் நிலையம் அருகே மெதுவாக வந்த கார் ஒன்று திடீரென தீப்பிடித்து, எரிந்தது. இதன்பின்னர் அந்த கார் வெடித்து சிதறியது.

    கார் வெடித்துச் சிதறியதும் அங்கு கூடியிருந்த மக்கள் அலறியடித்து தப்பியோடினர். தீயணைப்பு வாகனங்கள் அங்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டன.

    இந்தச் சம்பவத்தில் 12 பேர் உயிரிழந்துள்ளனர். இதுதவிர 24 பேர் காயமடைந்தனர். அவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு டெல்லி அரசு ரூ. 10 லட்சம் நிவாரண நிதியை டெல்லி அரசு அறிவித்துள்ளது.

    மேலும் குணப்படுத்தமுடியாத காயமடைந்தவர்களுக்கு ரூ. 5 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ. 2 லட்சமும் வழங்கப்படும் என்றும் ரேகா குப்தா தெரிவித்தார்.

    பாதிக்கப்பட்ட அனைவருக்கும் அரசு துணை நிற்கும் என்று அவர் உறுதியளித்தார். குண்டுவெடிப்பில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு ரேகா குப்தா தனது இரங்கலைத் தெரிவித்தார். 

    • இதுவரை 8 பேர் உயிரிழந்துள்ளனர். 24 பேர் வரை சிகிச்சை பெற்று வருகின்றனர்.
    • மக்கள் வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டார்.

    டெல்லி செங்கோட்டை அருகே உள்ள சாந்தினி சவுக் மெட்ரோ நிலையம் அருகே நேற்று மாலை கார் ஒன்று திடீரென வெடித்து விபத்துக்குள்ளானது.

    இதில் அருகில் இருந்த வாகனங்களுக்கும் தீ பரவியது. இந்த சமபவத்தில் இதுவரை 8 பேர் உயிரிழந்துள்ளனர். 24 பேர் வரை தீக்காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இந்த விபத்து பயங்கரவாத தாக்குதலா? என்ற சந்தேகம் வலுத்து வருகிறது.

    இந்நிலையில் டெல்லி முதல்வர் ரேகா குப்தா காயமடைந்தவர்கள் சிகிச்சை பெற்று வரும் லோக் நாயக் மருத்துவமனைக்கு சென்று பார்வையிட்டார். அங்கு சிகிச்சை பெற்று வருபவர்களிடம் நலம் விசாரித்து ஆறுதல் கூறியுள்ளார்.

    பின்னர், மருத்துவமனையில் மருத்துவர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகளின் குழுவுடன் ஆலோசனை கூட்டம் நடத்தினார். முன்னதாக உள்துறை அமைச்சர் அமித் ஷா மருத்துவமனைக்கு வந்து பார்வையிட்டுச் சென்ற நிலையில் ரேகா குப்தா வருகை தந்துள்ளார்.

    இதற்கிடையே ரேகா குப்தா வெளியிட்ட இரங்கல் எக்ஸ் பதிவில், உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு ஆறுதல் தெரிவித்ததுடன் மக்கள் வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டார்.

    • இதுவரை 8 பேர் உயிரிழந்துள்ளனர்.
    • இந்த விபத்து பயங்கரவாத தாக்குதலா? என்ற சந்தேகம் வலுத்து வருகிறது.

    டெல்லி செங்கோட்டை அருகே உள்ள சாந்தினி சவுக் மெட்ரோ நிலையம் அருகே நேற்று மாலை கார் ஒன்று திடீரென வெடித்து விபத்துக்குள்ளானது. இதில் அருகில் இருந்த வாகனங்களுக்கும் தீ பரவியது. இந்த சமபவத்தில் இதுவரை 8 பேர் உயிரிழந்துள்ளனர். 24 பேர் வரை தீக்காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இந்த விபத்து பயங்கரவாத தாக்குதலா? என்ற சந்தேகம் வலுத்து வருகிறது.

    இந்நிலையில் டெல்லி முதல்வர் ரேகா குப்தா வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், செங்கோட்டை அருகே நடந்த கார் குண்டுவெடிப்பு மிகவும் வேதனையானது. இந்த துயர விபத்தில் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்.

    பாதிக்கப்பட்டவர்களுக்கு சாத்தியமான அனைத்து உதவிகளும் வழங்கப்பட்டு வருகின்றன. டெல்லி காவல்துறை, என்எஸ்ஜி, என்ஐஏ மற்றும் எஃப்எஸ்எல் ஆகியவற்றின் குழுக்கள் கூட்டாக முழு சம்பவத்தையும் விசாரித்து வருகின்றன.

    டெல்லி மக்கள் அனைவரும் வதந்திகளைத் தவிர்த்து அமைதியைப் பேணுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். காவல்துறை மற்றும் நிர்வாகத்தால் வெளியிடப்படும் அதிகாரப்பூர்வ தகவல்களை மட்டுமே நம்புங்கள்" என்று தெரிவித்துள்ளார்.

    மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி வெளியிட்ட எக்ஸ் பதிவில், டெல்லியில் நடந்த துயரமான குண்டுவெடிப்புச் சம்பவத்தைக் கேட்டு மிகவும் அதிர்ச்சியடைந்தேன். தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த குடும்பங்களுக்கு என் இதயம் இரங்குகிறது. காயமடைந்த அனைவரும் விரைவில் குணமடையவும், வலிமை பெறவும் பிரார்த்திக்கிறேன" என்று தெரிவித்துள்ளார். 

    • டெல்லியில் பாண்டவர்களின் சிலைகளை நிறுவ வேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுத்தார்.
    • பழைய ரயில் நிலையம் மற்றும் இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தின் பெயர்களையும் மாற்ற வேண்டும்

    டெல்லியின் பெயரை மாற்றக் கோரி சாந்தினி சவுக் பாஜக எம்.பி. பிரவீன் கண்டேல்வால் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கும் டெல்லி முதல்வர் ரேகா குப்தாவுக்கும் கடிதம் எழுதியுள்ளார்.

    டெல்லியின் பெயரை 'இந்திரபிரஸ்தா' என்று மாற்ற வேண்டும் என்று விஸ்வ இந்து பரிஷத் உள்ளிட்ட இந்து அமைப்புகள் நீண்ட காலமாகக் கோரி வருகிறது.

    இந்நிலையில் பிரவீன் கண்டேல்வால் தனது கடிதத்தில் டெல்லியின் பெயரை 'இந்திரபிரஸ்தா' என மாற்ற வேண்டும் என வலியுத்தியுள்ளார்.

    மேலும் டெல்லியில் உள்ள பழைய ரயில் நிலையம் மற்றும் சர்வதேச விமான நிலையத்தின் பெயர்களையும் மாற்ற வேண்டும் என்றும் டெல்லியில் பாண்டவர்களின் சிலைகளை நிறுவ வேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுத்தார்.

    டெல்லியின் பெயரை 'இந்திரபிரஸ்தா' என்று மாற்றுவதன் மூலம், இந்தியாவின் வரலாறு, கலாச்சாரம் மற்றும் தர்மத்தை எதிர்கால சந்ததியினருக்கு கடத்த முடியும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். 

    • கூடுதல் நேர வேலைக்கு இரட்டிப்பு ஊதியம் உள்ளிட்ட சலுகைகள் வழங்க வேண்டும்.
    • பணிக்கு வரவும் பணி முடித்து திரும்பவும் போக்குவரத்து வசதி செய்து தரப்பட வேண்டும்.

    பெண்கள் இரவுப் பணி செய்ய அனுமதித்து டெல்லி தொழிலாளர் துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.

    அதன்படி கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் பெண்கள் இரவு நேரப் பணியில் வேலை செய்ய அதிகாரப்பூர்வமாக அனுமதி அளித்துள்ளது.

    இருப்பினும் இரவுப் பணிகளில் ஈடுபடுத்த நிறுவனங்கள் பெண் ஊழியர்களின் எழுத்துப்பூர்வ சம்மதம் பெற வேண்டும்.

    பணிக்கு வரவும் பணி முடித்து திரும்பவும் போக்குவரத்து வசதி மற்றும் அலுவலகங்களில் சிசிடிவி கண்காணிப்பு உட்பட போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகளை நிறுவனங்கள் செய்ய வேண்டும். மேலும் மதுபான கடைகளில் பெண்கள் இரவுப் பணி செய்வதற்கு மட்டும் தடை நீடிக்கும்.

    பெண்கள் இரவுப் பணியில் ஒரு நாளைக்கு 9 மணி நேரம், வாரத்திற்கு 48 மணி நேரம் மட்டுமே வேலை செய்ய அனுமதிக்கப்படுகிறது.

    கூடுதல் நேர வேலைக்கு இரட்டிப்பு ஊதியம் உள்ளிட்ட சலுகைகள் வழங்க வேண்டும்.

    டெல்லி முதல்வர் ரேகா குப்தா ஜூலையில் அறிவித்த இந்தச் சீர்திருத்தம், 1954 டெல்லி கடைகள் மற்றும் நிறுவனங்கள் சட்ட விதிகளை திருத்தியதன் மூலம் தற்போது நடைமுறைக்கு வந்துள்ளது.

    முன்னதாக தமிழ்நாடு, கர்நாடகா, மகாராஷ்டிரா, ஒடிசா மற்றும் ஜார்கண்ட் போன்ற மாநிலங்கள் ஏற்கனவே பெண்கள் இரவு நேரப் பணி செய்ய அனுமதி வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது. 

    • ஆயுதங்களும் சாஸ்திரங்களும் மட்டுமே நாட்டைப் பாதுகாக்க முடியும்.
    • இப்போது கியர்களை மாற்ற வேண்டிய நேரம் இது.

    டெல்லியின் பிதாம்பூரில் ஸ்ரீ பிராமண சபா ஏற்பாடு செய்த அகில இந்திய பிராமண மகாசபா நிகழ்வில் நேற்று டெல்லி முதல்வர் ரேகா குப்தா தலைமை விருந்தினராகப் பங்கேற்றார்.

    நிகழ்ச்சியில் பேசிய ரேகா குப்தா, "பிராமணர்கள்தான் நமது சமூகத்தில் அறிவு தீபத்தை ஏற்றுபவர்கள். பிராமணர்கள் சாஸ்திரங்களை மட்டுமல்ல, அஸ்திரங்களையும் வணங்கினர்.

    ஆயுதங்களும் சாஸ்திரங்களும் மட்டுமே நாட்டைப் பாதுகாக்க முடியும். மதத்தைப் பரப்பி, நல்ல பண்புகளை வளர்ப்பதன் மூலம், பிராமண சமூகம் எப்போதும் சமூகத்தின் நன்மைக்காகவே பாடுபட்டுள்ளது. எனவே எந்த அரசாங்கம் ஆட்சியில் இருந்தாலும் பிராமண சமூகத்தின் நலனுக்காக பாடுபட வேண்டும்" என்று தெரிவித்தார்.

    மேலும்,"கடந்த 27 ஆண்டுகளாக டெல்லியின் வளர்ச்சி மெதுவாக உள்ளது. இப்போது கியர்களை மாற்ற வேண்டிய நேரம் இது. டெல்லிக்கு இன்னும் தீவிரமான வளர்ச்சி தேவை.

    டெல்லியின் வளர்ச்சிக்கு நாம் ஒன்றாக இணைந்து பணியாற்றுவோம். ஒன்றுபட்ட சமூகத்தால் மட்டுமே உண்மையான முன்னேற்றத்தை அடைய முடியும்" என்று ரேகா குப்தா கூறினார். 

    • வாக்கு திருட்டு தொடர்பான காங்கிரஸ் குற்றச்சாட்டுக்கு ரேகா குப்தா பதில் அளித்துள்ளார்.
    • காங்கிரஸ் செய்தால் சரி, நாங்கள் செய்தா தவறா? எனக் கூறியதாக கெஜ்ரிவால் வீடியோ வெளியிட்டிருந்தார்.

    காங்கிரசின் வாக்கு மோசடி குற்றச்சாட்டு தொடர்பாக, டெல்லி முதல்வர் ரேகா குப்தா பேசியதை, கெஜ்ரிவால் எடிட் செய்து வீடியோ வெளியிட்ட நிலையில் எனது ரீல்ஸ்-களை பார்ப்பதை நிறுத்துங்கள் என ரேகா குப்தா தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக ரேகா குப்தா கூறியதாவது:-

    கெஜ்ர்வால் சார்-க்கு நான் சொல்ல விரும்புகிறேன், தயவு செய்து என்னுடைய வீடியோக்கள், பேட்டிகள் மற்றும் ரீல்ஸ்களை பார்ப்பதை குறைத்துக் கொள்ளவும். நான் என்ன சொல்கிறேன். என்ன சொல்லவில்லை என்று நாள் முழுவதும் என்னுடைய ரீல்ஸ்களை பார்த்து கண்டு பிடிக்கிறீர்கள் என நினைக்கிறேன்.

    கெஜ்ரிவால் கவனம் செலுத்த விரும்பினால், பஞ்சாப் மக்கள் மீது கவனம் செலுத்த வேண்டும். மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள அங்குள்ள மக்களை அவர் பார்க்க வில்லை.

    ரேகா குப்தா பேசியதாக கெஜ்ரிவால் வெளியிட்டிருந்த வீடியோவில் "காங்கிரஸ் 70 ஆண்டுகளாக ஆட்சி செய்த காலத்தில் EVS கையாளப்பட்டது. அது பரவாயில்லை. ஆனால் இப்போது நாங்கள் கையாளும்போது அவர்கள் மோசமாக உணர்கிறார்கள்" என பதிவாகியிருந்தது. மேலும், முதலமைச்சர் என்ன சொல்கிறார்? என கேள்வி எழுப்பியிருந்தார்.

    ஆனால் டெல்லி பாஜக ரேகா குப்தா பேசிய வீடியோவை வெளியிட்டுள்ளது. அதில் "காங்கிரஸ் 70 வருடங்களாக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை கையாண்டு வந்த வரை, அது பரவாயில்லை, ஆனால் இப்போது நாம் அதைச் செய்துவிட்டதால், அவர்கள் வருத்தப்படுகிறார்கள். அவர்கள் வெற்றி பெறும்போது, அது பொதுமக்களின் ஆணை, நாம் வெற்றி பெறும்போது, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஹேக் செய்யப்படுகின்றன?.

    இந்த பார்முலா எங்கே எழுதப்பட்டுள்ளது? ராகுல் காந்தி இதை எங்கே படித்தார் என்று யாராவது சொல்லுங்கள். அவர் எப்போதும் பொதுமக்களை தவறாக வழி நடத்துகிறார், எப்போதும் மக்களிடம் பொய் சொல்கிறார். பொதுமக்கள் அவருக்கு பல வாய்ப்புகளை வழங்கியுள்ளனர், அவர் பல ஆண்டுகளாக அதிகாரத்தில் இருந்துள்ளார். இன்று அவர் மிகவும் கீழ்த்தரமாக இதுபோன்ற விஷயங்களைச் சொல்லும் அளவுக்குக் தரம் தாழ்ந்துவிட்டார்" என ரேகா குப்தா குறிப்பிட்டுள்ளார்.

    • விசாரணையில், அவர் நாய்களை மிகவும் நேசித்தது T
    • கூகிள் பே மூலம் ராஜேஷுக்கு ரூ.2,000 அனுப்பிய ஆட்டோ ரிக்‌ஷா ஓட்டுநரும் அடங்குவார்.

    டெல்லி முதலமைச்சர் ரேகா குப்தா கடந்த ஆகஸ்ட் 20 காலையில் மக்கள் குறைதீர் கூட்டத்தில் பொதுமக்களை சந்தித்துக் கொண்டிருந்த போது, கூட்டத்தில் இருந்த நபர் ஒருவர் அவரை தாக்கியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    குற்றம்சாட்டப்பட்டவர் குஜராத்தின் ராஜ்கோட்டைச் சேர்ந்த ஆட்டோ ரிக்ஷா ஓட்டி ராஜேஷ்பாய் சகாரியா என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

    அவரை கைது செய்து நடத்தப்பட்ட விசாரணையில், அவர் நாய்களை மிகவும் நேசித்ததாகவும், டெல்லியில் தெருநாய்களைப் பிடித்து காப்பகங்களில் அடைக்கும் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவால் கோபமடைந்து இந்த தாக்குதலை செய்ததாவும் தெரியவந்தது.

    ராஜேஷ் டெல்லிக்கு வந்தபோது, அவரது நகரத்தைச் சேர்ந்த ஐந்து பேருடன் தொடர்பில் இருந்தார். டெல்லி காவல்துறை குழு ராஜ்கோட்டில் ஐந்து பேரை விசாரித்தது. இதில் கூகிள் பே மூலம் ராஜேஷுக்கு ரூ.2,000 அனுப்பிய ஆட்டோ ரிக்ஷா ஓட்டுநரும் அடங்குவார். அந்த ஓட்டுனரையும் ஞாயிற்றுக்கிழமை போலீஸ் காவலில் எடுத்து.

    இந்நிலையில் ராஜேஷ் ரேகா குப்தாவை கொலை செய்யும் திட்டத்துடன் டெல்லி வந்ததும் விசாரணையில் கண்டறியப்பட்டது.

    சம்பத்தன்று ராஜேஷ் முதல்வரின் வீட்டிற்கு கத்தியை கொண்டு வந்துள்ளார். ஆனால் போலீஸ் பாதுகாப்பைக் கண்டதும், அவர் கத்தியை சிவில் லைன்ஸ் பகுதியில் வீசினார். அது தற்போது போலீசாரால் மீட்கப்பட்டுள்ளது.

    • அந்த நபர் கைது செய்யப்பட்ட நிலையில் அவர் நாய் பிரியர் என்று தெரியவந்துள்ளது.
    • இப்போது நான் முன்பை விட அதிக ஆற்றலுடனும் அர்ப்பணிப்புடனும் உங்களுடன் இருப்பேன்.

    டெல்லி முதலமைச்சர் ரேகா குப்தா இன்று காலையில் மக்கள் குறைதீர் கூட்டத்தில் பொதுமக்களை சந்தித்துக் கொண்டிருந்த போது, கூட்டத்தில் இருந்த நபர் ஒருவர் அவரை தாக்கியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    அந்த நபர் கைது செய்யப்பட்ட நிலையில் அவர் நாய் பிரியர் என்றும் தெரு நாய்களை தெருக்களில் இருந்து அப்புறப்படுத்தி கூண்டுகளில் அடைக்கும் டெல்லி அரசின் முயற்சியை எதிர்த்து இந்த தாக்குதலை நடத்தினார் என்றும் முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது.

    இந்நிலையில் தன் மீதான தாக்குதல் குறித்து ரேகா குப்தா தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

    அதில், "இன்று காலை ஜன் சன்வாய் நிகழ்ச்சியில் என் மீது நடத்தப்பட்ட தாக்குதல் என் மீது மட்டுமல்ல, டெல்லிக்கும் பொதுமக்களுக்கும் சேவை செய்ய வேண்டும் என்ற எங்கள் உறுதியின் மீதும் நடத்தப்பட்ட ஒரு கோழைத்தனமான முயற்சியாகும்.

    இந்த தாக்குதலுக்குப் பிறகு நான் அதிர்ச்சியில் இருந்தேன், ஆனால் இப்போது நான் நன்றாக உணர்கிறேன். எனது அனைத்து நலம் விரும்பிகளும் என்னை சந்திக்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். நான் விரைவில் உங்களுடன் பணியாற்றுவதைக் காணலாம்.

    இதுபோன்ற தாக்குதல்கள் எனது மன உறுதியையும் பொதுமக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற எனது உறுதியையும் ஒருபோதும் உடைக்க முடியாது. இப்போது நான் முன்பை விட அதிக ஆற்றலுடனும் அர்ப்பணிப்புடனும் உங்களுடன் இருப்பேன்.

    ஜன் சன்வாய் மற்றும் பொதுப் பிரச்சினைகளைத் தீர்ப்பது முன்பு போலவே அதே தீவிரத்துடனும் அர்ப்பணிப்புடனும் தொடரும். உங்கள் நம்பிக்கையும் ஆதரவும் எனது மிகப்பெரிய பலமாகும்.

    உங்கள் மகத்தான அன்பு, ஆசீர்வாதம் மற்றும் நல்வாழ்த்துக்களுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார். 

    • மக்கள் குறைத்தீர் கூட்டத்தில் முதலமைச்சர் ரேகா குப்தா பங்கேற்றார்.
    • முதலமைச்சர் ரேகா குப்தாவிற்கு முகம் மற்றும் தலைப்பகுதியில் காயம் ஏற்பட்டது.

    டெல்லி முதலமைச்சர் ரேகா குப்தா இன்று காலையில் பொதுமக்களை சந்தித்துக் கொண்டிருந்த போது, கூட்டத்தில் இருந்த நபர் ஒருவர் முதலமைச்சரை கடுமையாக தாக்கியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    மக்கள் குறைத்தீர் கூட்டத்தில் முதலமைச்சர் ரேகா குப்தா பங்கேற்றபோது தாக்குதல் நடத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது,

    இதில் முதலமைச்சர் ரேகா குப்தாவிற்கு முகம் மற்றும் தலைப்பகுதியில் காயம் ஏற்பட்டது. டெல்லி முதல்வர் தாக்கப்பட்ட புகார் தொடர்பாக விசாரணை நடத்திய போலீசார் ஒருவரை கைது செய்துள்ளனர். 

    • 14 ஏர் கண்டிஷனர்கள் மற்றும் பல தொலைக்காட்சிகள் உட்பட, குடியிருப்பின் புதுப்பிப்புக்காக ரூ.60 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது.
    • அதில் விளக்கு அமைப்புகளுக்கு மட்டுமே ரூ.6 லட்சத்திற்கும் அதிகமான நிதி ஒதுக்கப்பட்டது.

    டெல்லி முதல்வர் ரேகா குப்தாவின் வீட்டின் ரூ.60 லட்சம் மதிப்பிலான புதுப்பித்தல் பணிகள் சர்ச்சைக்கு பின் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    ராஜ் நிவாஸ் மார்க்கில் உள்ள ரேகா குப்தாவுக்கு இரண்டு பங்களாக்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஒன்று குடியிருப்புக்காகவும் மற்றொன்று அலுவலகப் பணிகளுக்காகவும் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த அலுவலகம் கடந்த ஆண்டு திறக்கப்பட்டது.

    14 ஏர் கண்டிஷனர்கள் மற்றும் , 5 LED தொலைக்காட்சிகள் உட்பட, குடியிருப்பின் புதுப்பிப்புக்காக ரூ.60 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது. அதில் விளக்கு அமைப்புகளுக்கு மட்டுமே ரூ.6 லட்சத்திற்கும் அதிகமான நிதி ஒதுக்கப்பட்டது.

    செவ்வாய்க்கிழமை பொதுப்பணித்துறை வெளியிட்ட டெண்டரின்படி, முதல் கட்ட கட்டுமானப் பணிகள் ஜூலை மாத நடுப்பகுதியில் தொடங்க திட்டமிடப்பட்டது.

    பள்ளி கட்டண உயர்வு, விலைவாசி உயர்வு மற்றும் வேலையின்மை போன்ற பிரச்சினைகளால் மக்கள் பாதிக்கப்பட்ட நேரத்தில் முதலமைச்சரின் வீண் செலவுகளை ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸ் விமர்சித்தது. இதைத்தொடர்நது நிர்வாக காரணங்களுக்காக புதுப்பித்தல் பணிகள் நிறுத்திவைக்கப்பட்டதாக டெல்லி அரசு அறிவித்தது.

    முன்னதாக கடந்த பிப்ரவரி சட்டமன்றத் தேர்தலில் கெஜ்ரிவால் ஆடம்பர பங்களாவில் வசிப்பதாக பாஜக பிரசாரம் செய்து வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

    • சுமார் 62 லட்சம் வாகனங்கள் ஒரே இரவில் மாயமாகும் என ஆம் ஆத்மி குற்றம்சாட்டியிருந்தது.
    • தடையை விதிக்க ரேகா குப்தா தலைமையிலான பாஜக அரசு ஆட்டோமொபைல் நிறுவனங்களிடம் எவ்வளவு பணம் வாங்கியுள்ளது என கேட்டார்.

    டெல்லியில் 10 ஆண்டுகள் பழமையான டீசல் வாகனங்களுக்கும், 15 ஆண்டுகள் பழமையான பெட்ரோல் வாகனங்களுக்கும் எரிபொருள் விற்பனை செய்ய முதல்வர் ரேகா குப்தா தலைமையிலான மாநில அரசு ஜூலை 1 முதல் தடை விதித்தது.

    இதனால் போக்குவரத்து போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு தடையை மீறும் வாகனங்களை பறிமுதல் செய்து வந்தனர்.

    இந்நிலையில் பழைய வாகனங்களுக்கு எரிபொருள் வழங்க மறுக்கும் சர்ச்சைக்குரிய உத்தரவை டெல்லி அரசு கைவிட்டுள்ளது.

    பொதுமக்களின் கடும் எதிர்ப்பு மற்றும் கோபத்திற்குப் பிறகு, இந்த முடிவை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளது.

    இந்த உத்தரவால் சுமார் 62 லட்சம் வாகனங்கள் ஒரே இரவில் மாயமாகும் என ஆம் ஆத்மி குற்றம்சாட்டியிருந்தது.

    இந்த தடையை விதிக்க ரேகா குப்தா தலைமையிலான பாஜக அரசு ஆட்டோமொபைல் நிறுவனங்களிடம் எவ்வளவு பணம் வாங்கியுள்ளது என எதிர்கட்சித் தலைவர் அதிஷி கேள்வி எழுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.   

    ×