‘வெப்பத்தால் நீர் ஆவியாகிறது’ - தலைநகர் தண்ணீர் பற்றாக்குறைக்கு புதுவிளக்கம் அளித்த முதல்வர் ரேகா குப்தா!

ஆம் ஆத்மி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் வினையாற்றியுள்ளன.
‘வெப்பத்தால் நீர் ஆவியாகிறது’ - தலைநகர் தண்ணீர் பற்றாக்குறைக்கு புதுவிளக்கம் அளித்த முதல்வர் ரேகா குப்தா!
Published on

தேசிய தலைநகரில் நிலவும் தண்ணீர் பற்றாக்குறைக்கு அம்மாநிலத்தின் முதலமைச்சர் ரேகா குப்தா கொடுத்த விளக்கம் தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

கோடை வெப்பத்தால் நாடு முழுவதும் தண்ணீர் பற்றாக்குறை நிலவிவரும் நிலையில், சமீபத்தில் பாஜக பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய ரேகா குப்தா,

“வெப்ப அலை காரணமாக கால்வாய்களில் இருந்து எடுத்து வரப்படும் தண்ணீர், வரும் வழியிலேயே ஆவியாகி விடுவதால் தான் தட்டுப்பாடு ஏற்படுகிறது” என தெரிவித்தார்.

இந்த வீடியோ இணையத்தில் வைரலானதைத் தொடர்ந்து, எதிர்க்கட்சிகளும் பொதுமக்களும் இதைக் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

ஆம் ஆத்மி சமூக வலைதளப் பக்கத்தில், டெல்லியின் சில பகுதிகளில் தேங்கிக்கிடக்கும் சாலைத் தண்ணீரின் வீடியோவைப் பகிர்ந்து, “மேடம், தயவுசெய்து இந்த தண்ணீரையும் அப்படியே ஆவியாகச் செய்துவிடுங்கள்” என்று கிண்டலாகப் பதிவிட்டுள்ளது.

காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ராகினி நாயக், “முட்டாள்தனத்திற்கும் ஒரு எல்லை இருக்க வேண்டாமா?” என்று விமர்சித்துள்ளார்.

இதற்கு முன்பும் முதலமைச்சர் ரேகா குப்தா டெல்லியின் காற்றுமாசு தொடர்பாக தெரிவித்திருந்த கருத்து பெரும் பேசுபொருளானது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com