ஆசிய பாராலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்ற வீரர்களுக்கு குடியரசு தலைவர் வாழ்த்து

புதிய ஆசிய பாரா விளையாட்டுப் போட்டி சாதனையைப் படைத்ததன் மூலம், இந்த வெற்றியை நீங்கள் இன்னும் சிறப்பானதாக்கியுள்ளீர்கள்.
President of India
Published on: 

ஜப்பானின் ஐச்சி-நகோயாவில் நடைபெற்று வரும் 2026 ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்ற இந்திய வீரர்களுக்கு இந்தியக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்

இது குறித்து அவர் தனது எக்ஸ் பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது

2026 ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில், பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் ஸ்டாண்டிங் SH1 பிரிவில் தங்கப் பதக்கம் வென்ற மோனா அகர்வாலுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். புதிய ஆசிய பாரா விளையாட்டுப் போட்டி சாதனையைப் படைத்ததன் மூலம், இந்த வெற்றியை நீங்கள் இன்னும் சிறப்பானதாக்கியுள்ளீர்கள்.

2026 ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில், பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் ஸ்டாண்டிங் SH1 பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற அவனி லேகராவுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள். உங்கள் விளையாட்டுப் பயணம், நீங்கள் சிறந்து விளங்கவும், உங்கள் இலட்சியங்களை அடையவும் மேலும் பல புதிய வாய்ப்புகளைத் தொடர்ந்து பெற்றுத் தரட்டும். உங்கள் எதிர்காலம் சிறப்பாக அமைய வாழ்த்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

ஆண்களுக்கான ஈட்டி எறிதல் F46 பிரிவில் தங்கம் வென்று சாதனை படைத்த ரிங்குவிற்கு வாழ்த்துத் தெரிவித்த அவர், உங்களது ஈட்டி எறிதல் இந்தியாவின் மூவண்ணக் கொடியை பதக்க மேடையின் உச்சிக்குக் கொண்டு சென்று பாரதத்திற்குப் பெருமை சேர்த்துள்ளது.

என்று குறிப்பிட்டுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com