

இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் விவகாரம் தொடர்பாக, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை சந்திக்க, இந்தியா கூட்டணிக்கு இரவு 8 மணிக்கு அனுமதி வழங்கியுள்ளது ராஷ்டிரபதி பவன்.
இந்தியா கூட்டணியின் முக்கியத் தலைவர்கள் 10 பேர் அடங்கிய குழு இச்சந்திப்பில் பங்கேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதுவரை ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன் கார்கே, மம்தா பானர்ஜி, தேஜஸ்வி யாதவ், சிபிஐ(எம்) பொதுச் செயலாளர் எம்.ஏ. பேபி மற்றும் ராஜீவ் ராய் ஆகியோர் இந்த சந்திப்புக் குழுவில் இடம்பெற இறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், மீதமுள்ள உறுப்பினர்கள் குறித்து முடிவு செய்யப்பட்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த அக்டோபர் 2ஆம் தேதியே இச்சந்திப்பிற்கான முதல் கோரிக்கை கடிதம் அனுப்பப்பட்ட நிலையில், சந்திப்பில் கலந்துகொள்ளும் தலைவர்களின் பெயர்களை ராஷ்டிரபதி பவன் கேட்டது. இதனைத்தொடர்ந்து அக்டோபர் 5ம் தேதி பெயர்களை குறிப்பிட்டு மீண்டும் கோரிக்கை கடிதத்தை காங்கிரஸ் அணுப்பியது.
அனுமதி தராவிடில் ராஷ்டிரபதி பவனை நோக்கிப் பேரணி நடத்த எதிர்க்கட்சிகள் திட்டமிட்டிருந்தன. இந்தச் சூழ்நிலையில், தற்பொழுது இன்று இரவு 8 மணிக்குச் சந்திப்பதற்கான நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்தியத் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் மற்றும் அதன் மீதான புகார்கள் தொடர்பாக, குடியரசுத் தலைவரிடம் நேரில் முறையிட்டு மனு அளிப்பதற்காக இந்தச் சந்திப்பு கோரப்பட்டது.