ஒருநாள் போட்டி தொடர்: நியூசிலாந்து சென்றடைந்த விராட் கோலி

இந்திய கிரிக்கெட் அணி 5 ஆட்டம் கொண்ட ஒரு நாள் போட்டி தொடரில் விளையாட உள்ளது.
Virat kohli
Published on: 

நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் இந்திய கிரிக்கெட் அணி 5 ஆட்டம் கொண்ட ஒரு நாள் போட்டி தொடரில் விளையாட உள்ளது.

இதன் முதல் போட்டி வருகிற நவம்பர் 4-ந்தேதி ஆக்லாந்தில் நடக்கிறது. இந்த நிலையில் ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியில் விளையாடி வரும் முன்னணி வீரர் விராட் கோலி, நியூசிலாந்துக்கு சென்றடைந்தார்.

ஆக்லாந்து விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்த கோலியை பார்க்க ரசிகர்கள் திரண்டனர்.

அப்போது சில ரசிகர்கள் செல்பி எடுக்கவும், ஆட்டோகிராப் பெறவும், கைகுலுக்கவும் முயன்றனர். அவர்களை பாதுகாப்பு அதிகாரிகள் தடுத்தனர்.

X