எம்.எஸ். டோனியின் குடியரசு தின விழா கொண்டாட்டம் - வைரலாகும் வீடியோ

டோனியின் மனைவி சாக்ஷி தனது இன்ஸ்டாகிராம் அக்கவுன்டில் வெளியிட்டுள்ளார். வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
எம்.எஸ். டோனியின் குடியரசு தின விழா கொண்டாட்டம் - வைரலாகும் வீடியோ
Published on

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ். டோனி 75-வது குடியரசு தினத்தை ராஞ்சியில் உள்ள தனது பண்ணை வீட்டில் சிறப்பாக கொண்டாடினார். இது தொடர்பான வீடியோவை எம்.எஸ். டோனியின் மனைவி சாக்ஷி தனது இன்ஸ்டாகிராம் அக்கவுன்டில் வெளியிட்டுள்ளார்.

வீடியோவில் கொடி கம்பத்தில் உயரமாக பறக்கும் தேசிய கொடியை எம்.எஸ். டோனி பார்த்து கொண்டே நடந்து வரும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. பலரும் இந்த வீடியோவிற்கு லைக் மற்றும் கமென்ட்களை பதிவிட்டு வருகின்றனர்.

விரைவில் துவங்க இருக்கும் இந்தியன் பிரீமியர் லீக் 2024 தொடரில் எம்.எஸ். டோனி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சார்பில் களமிறங்க இருக்கிறார். கடந்த ஆண்டுடன் ஐ.பி.எல்.-இல் இருந்து டோனி ஓய்வு பெறுவார் என பலமுறை தகவல்கள் வெளியாகி வந்தது.

அந்த வகையில், இது தொடர்பான கேள்விக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் பதில் அளித்துள்ளார். அதில், இது அவரின் கடைசி தொடராக இருக்குமா என்பதை எம்.எஸ். டோனி தான் முடிவு செய்வார் என தெரிவித்து இருக்கிறார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com