ஐ.பி.எல். மினி ஏலம்: 66 வீரர்களை எடுக்க ரூ.297.95 கோடி வைத்து இருக்கும் 10 அணிகள்

34 வெளிநாட்டினர் உள்பட 89 வீரர்கள்‌ விடுவிக்கப்பட்டனர்.
IPL Mini Auction
Published on: 

2027 ஐ.பி.எல். போட்டிக்கான மினி ஏலம் டிசம்பர் 16-ந்தேதி கோவாவில் நடக்கிறது. கடந்த 3 சீசன்களாக வெளிநாடுகளில் நடை பெற்ற ஐ.பி.எல். ஏலம் இந்த ஆண்டு மீண்டும் இந்தியாவில் நடைபெறுகிறது. காலை 11 மணிக்கு ஏலம் தொடங்குகிறது.

ரூ.297.95 கோடி

இதற்கான வீரர்கள் தக்கவைப்பு, விடுவிப்பு விவரங்களை 10 அணிகளும் நேற்று முன்தினம் வெளியிட்டன. 55 வெளிநாட்டு வீரர்கள் உள்பட மொத்தம் 184 பேர் தக்கவைக்கப்பட்டனர். 34 வெளிநாட்டினர் உள்பட 89 வீரர்கள்‌ விடுவிக்கப்பட்டனர்.

ஏலத்தில் 10 அணிகளுக்கும் 25 வெளிநாட்டு வீரர்கள் உள்பட மொத்தம் 66 பேர் தேவை. மொத்தம் ரூ.297.95 கோடி தொகையை மீதம் வைத்துள்ளனர்.

லக்னோசூப்பர் ஜெயண்ட்ஸ் அதிகபட்சமாக ரூ. 47.45 கோடியும், குஜராத் டைட்டன்ஸ் அணி குறைந்தபட்சமாக ரூ. 8.75 கோடியும் வைத்துள்ளனர்.

X