

நியூசிலாந்து - இந்தியா மோதும் 3-வது கிரிக்கெட் போட்டி ஹாமில்டனில் நாளை (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது.
இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற் கொண்டு 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் ஆக்லாந்தில் நடந்த தொடக்க ஆட்டத்தில் இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்திலும், வெலிங்டனில் மழை பாதிப்பு மத்தியில் நடந்த 2-வது ஒருநாள் போட்டியில் டக் வொர்த் லூயிஸ் விதிமுறைபடி 4 ரன்கள் வித்தியாசத்திலும் வெற்றி பெற்று தொடரில் 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இந்தநிலையில் இந்தியா- நியூசிலாந்து மோதும் 2-வது ஒரு நாள் போட்டி ஹாமில்டனில் செடன் பார்க் ஸ்டேடியத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது.
இந்திய அணியை பொறுத்தவரை இந்த தொடரில் போதிய அனுபவம் இல்லாத இந்திய வேகப்பந்து வீச்சு கூட்டணி கலக்கி வருகிறது. குர்னூர் பிரார், அன்ஷூல் கம்போஜ், அர்ஷ்தீப் சிங், அகிப் நபி ஆகியோர் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள். இந்த இளம் கூட்டணி நியூசி லாந்து அணிக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்து வருகிறது. முதல் ஒருநாள் போட்டியில் 185 ரன்னிலும், 2-வது ஒருநாள் போட்டியில் 134 ரன்னிலும் நியூசிலாந்து அணியை சுருட்டியது.
3-வது ஒருநாள் போட்டியிலும் இந்த இளம் கூட்டணி அச்சுறுத்த காத்திருக்கிறது. இவர்களை நியூசிலாந்து பேட்ஸ்மேன்கள் எப்படி சமாளிக்க போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
பேட்டிங்கில் விராட் கோலி, ரோகித் சர்மா. கே.எல்.ராகுல், ஸ்ரேயாஸ் அய்யர் பலம் சேர்க்கி றார்கள். கேப்டன் சுப்மன் கில் தடுமாறி வருகிறார். அவர் எழுச்சி பெற வேண்டியது அவசியம். நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டிக்கு தயாராகும் வகையில் 3-வது ஒருநாள் போட்டியு டன் சுப்மன் கில்லுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.
நியூசிலாந்தை பொறுத்தவரை பேட்டிங் மெச்சும்படி இல்லை. கடந்த 2 போட்டிகளிலும் சொர்ப ரன்களில் சுருண்டு சொந்த மண்ணில் தள்ளாடி வருகிறது. அதிலும் கடந்த போட்டியில் சொந்த மண்ணில் குறைவான ஸ்கோரை பதிவு செய்து மோசமான சாதனையை படைத்தது. அந்த அணியில் டேரில் மிட்செல் மட்டும் நல்ல நிலையில் உள்ளார்.
மற்றவர்கள் சொதப்பி வருகிறார்கள். பந்துவீச்சை பொறுத்தவரையில் கடந்த போட்டியில் குறைந்த ஸ்கோரை சேசிங் செய்த இந்திய அணிக்கு நியூசிலாந்து பந்து வீச்சாளர்கள் பெரும் குடைச்சலை கொடுத்தனர். 134 ரன் இலக்கையும் இந்திய அணி போராடி தான் வெற்றி பெற்றது.
அந்த அணியில் கைல் ஜாமிசன், ஜேக்கப் டப்பி துல்லியமாக பந்து வீசினர். 3-வது போட்டி யில் பேட்ஸ்மேன்கள் பொறுப்பை உணர்ந்து ஆட வேண்டியது அவசியமாகும். இல்லை என் றால் தொடரை இழக்க நேரிடும்.
இந்திய அணி தொடரை கைப்பற்றவும், நியூசிலாந்து அணி தொடரை தக்கவைக்கவும் வரிந்து கட்டும் என்பதால், இந்த போட்டியில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.
போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-
இந்தியா: சுப்மன் கில் (கேப்டன்), ரோகித் சர்மா, விராட் கோலி, ஸ்ரேயாஸ் அய்யர், லோகேஷ் ராகுல். நமன் திர், அக்ஷர் பட்டேல், அர்ஷ்தீப் சிங், குர்னூர் பிரார், அன்ஷூல் கம்போஜ், ஆகிப் நபி.
நியூசிலாந்து: வில் யங், டிம் செய்பெர்ட், ஹென்றி நிகோல்ஸ், டேரில் மிட்செல், டாம் லாதம், கிளென் பிலிப்ஸ், மிட்செல் சான்ட்னெர், கைல் ஜாமிசன், ஜேக்கப் டப்பி, பிளேர் டிக்னெர், நாதன் சுமித் அல்லது மேட் ஹென்றி.
இந்திய நேரப்படி காலை 7.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை சோனி ஸ்போர்ட்ஸ் டென்1, 3, 4, 5 சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.