ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை: பாகிஸ்தானை வீழ்த்தி வெண்கல பதக்கத்தை கைப்பற்றியது இந்தியா

இந்த போட்டியில் தொடக்கம் முதலே இரு அணிகளும் சம பலத்துடன் ஆதிக்கம் செலுத்தி வந்தன. இருப்பினும் இந்திய வீரர்கள் சிறப்பாக ஆடி பாகிஸ்தானின் வெற்றி கனவை தட்டிப்பறித்தனர்.
இந்திய ஹாக்கி அணி
இந்திய ஹாக்கி அணி
Published on

டாக்கா:

6-வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டி வங்காளதேச தலைநகர் டாக்காவில் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய அணி அரையிறுதிப் போட்டியில்

5-3 என்னும் கோல் கணக்கில் ஜப்பானிடம் தோல்வி அடைந்தது. 

இந்நிலையில் 3-வது இடத்துக்கான போட்டி இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே இன்று நடைபெற்றது.  இந்த போட்டியில் தொடக்கம் முதலே இரு அணிகளும் சம பலத்துடன் ஆதிக்கம் செலுத்தி வந்தன. இருப்பினும் இந்திய வீரர்கள் சிறப்பாக ஆடி பாகிஸ்தானின் வெற்றி கனவை தட்டிப்பறித்தனர். இதன்மூலம் இந்திய அணி 4-3 என்ற கணக்கில் பாகிஸ்தானை வீழ்த்தி வெண்கல பதக்கத்துடன் 3-வது இடத்தை கைப்பற்றியது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com