1 மணிநேரத்தில் 1 மில்லியன் சப்ஸ்க்ரைபர்களை கடந்தது ரொனால்டோவின் யூட்யூப் சேனல்

கால்பந்து வீரர் ரொனால்டோ தற்போது யூட்யூபராக புது அவதாரம் எடுத்துள்ளார். ரொனால்டோ 'யுஆர் கிறிஸ்டியானோ' என்ற புதிய யூடியூப் சேனலை தொடங்கியுள்ளார்.
ronaldo youtube channel
Published on

உலகின் முன்னணி கால்பந்து வீரராக போர்ச்சுக்கல் நாட்டின் கிறிஸ்டியானோ ரொனால்டோ திகழ்ந்து வருகிறார். 39 வயதான ரொனால்டோ கால்பந்து வாழ்க்கையில் தனது கடைசி கட்டத்தை எட்டியுள்ளார்.

கால்பந்து வீரர் ரொனால்டோ தற்போது யூட்யூபராக புது அவதாரம் எடுத்துள்ளார்.

'யுஆர் கிறிஸ்டியானோ' என்ற புதிய யூடியூப் சேனலை அவர் தொடங்கியுள்ளார். இது தொடர்பான அறிவிப்பு வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவில், "நான் யுஆர் கிறிஸ்டியானோ என்ற பெயரில் யூட்யூப் சேனல் ஆரம்பித்துள்ளேன். அதை அனைவரும் சப்ஸ்க்ரைப் செய்து கொள்ளுங்கள்" என்று காமெடியாக பேசியுள்ளார்.

ரொனால்டோவின் யூட்யூப் சேனலை 1 மணிநேரத்திற்குள் 1 மில்லியன் பேர் சப்ஸ்க்ரைப் செய்துள்ளனர். இதுவரை இந்த சேனலில் 18 வீடியோக்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com