உலகக் கோப்பை 2023.. ரிவ்யூ எடுத்திருக்கலாமோ? புலம்பும் ஸ்டீவன் ஸ்மித்

உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்திய அணி 240 ரன்களை குவித்தது. கோலி, கே.எல். ராகுல் பொறுமையாக ஆடி அரைசதம் அடித்தனர்.
உலகக் கோப்பை 2023.. ரிவ்யூ எடுத்திருக்கலாமோ? புலம்பும் ஸ்டீவன் ஸ்மித்
Published on

உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் ஆடி 240 ரன்களை சேர்த்தது. நடப்பு உலகக் கோப்பை தொடரில் முதல் முறையாக இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

இந்த நிலையில், இரண்டாவது இன்னிங்ஸ்-ஐ தொடங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு துவக்கமே அதிர்ச்சி காத்திருந்தது. போட்டி தொடக்கத்திலேயே விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது ஆஸ்திரேலிய அணி. அப்படியாக ஜஸ்பிரித் பும்ரா வீசிய பந்தை எதிர்கொண்ட ஸ்டீவன் ஸ்மித், கணிப்பில் செய்த பிழை காரணமாக எல்.பி.டபிள்யூ. முறையில் தனது விக்கெட்டை இழந்தார்.

களத்தில் இருந்த அம்பயர் விக்கெட் கொடுக்க, அதிர்ச்சியில் இருந்த ஸ்டீவன் ஸ்மித் மறுமுனையில் விளையாடி வந்த டிராவிஸ் ஹெட்-இடம் ரிவ்யூ எடுக்கட்டுமா என கேட்டார். சந்தேகத்தில் இருந்த ஹெட் வேண்டாம் என்ற வகையில் பதில் அளிக்க, சற்றும் யோசிக்காமல் ஸ்டீவன் ஸ்மித் களத்தை விட்டு வெளியேறினார்.

பிறகு வெளியான ரி-பிளே-வில் ஸ்டீவன் ஸ்மித் அவுட் ஆன பந்து ஸ்டம்ப்களை அடிக்க தவறியது தெரியவந்தது. அந்த வகையில், அவர் ரிவ்யூ எடுத்திருந்தால் விக்கெட்டை தக்கவைத்துக் கொண்டிருக்க முடியும். தனது விக்கெட்டில் ரிவ்யூ எடுத்திருந்தால், தப்பித்து இருக்கலாம் என்பதை அறிந்த பின் ஸ்டீவன் ஸ்மித் கடுப்பாகி இருப்பார். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com