உலகக் கோப்பை 2023.. 5 பாயிண்ட்.. இதெல்லாம் நடந்தால் Cup நமக்குத் தான்..

உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்திய அணி 240 ரன்களை சேர்த்தது. ஆஸ்திரேலியா சார்பில் மிட்செல் ஸ்டார்க் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்த வேண்டும்.
உலகக் கோப்பை 2023.. 5 பாயிண்ட்.. இதெல்லாம் நடந்தால் Cup நமக்குத் தான்..
Published on

உலகக் கோப்பை 2023 இறுதிப் போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. 50 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த இந்திய அணி 240 ரன்களை சேர்த்துள்ளது. ஆஸ்திரேலியா சார்பில் சிறப்பாக பந்துவீசிய மிட்செல் ஸ்டார்க் மூன்று விக்கெட்டுகளையும், பேட் கம்மின்ஸ், ஹேசில்வுட் தலா இரண்டு விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். ஹேசில்வுட், மேக்ஸ்வெல், ஆடம் ஜாம்பா தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

241 ரன்கள் எனும் இலக்கை துரத்தும் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்திய அணி கோப்பையை வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இந்த நிலையில், இந்திய அணி வெற்றி பெற என்னவெல்லாம் நடக்க வேண்டும் என்பது பற்றி தொடர்ந்து பார்ப்போம்.

- 70 ரன்களுக்குள் 2 விக்கெட்டுகளை கைப்பற்ற வேண்டும்.

- லீக் போட்டியை போன்றே குல்தீப் யாதவ் பந்துவீச்சில் மேக்ஸ்வெல் விக்கெட்டை துவக்கத்திலேயே வீழ்த்த வேண்டும்.

- முகமது ஷமி ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்த வேண்டும்.

- மிடில் ஓவர்களில் ஜடேஜா 30 ரன்களுக்கு மேல் கொடுக்காமல் பந்துவீச வேண்டும்.

- ஸ்மித், லபுஷேன் நீண்ட நேரம் களத்தில் இருப்பதை அனுமதிக்காமல், விக்கெட் வீழ்த்த வேண்டும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com