கண்ணீருடன் அனைத்து வித கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு அறிவித்த பிராவோ- வைரல் வீடியோ

2021-ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார்.வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக 40 டெஸ்ட், 164 ஒருநாள் போட்டி, 91 டி20 போட்டிகளில் விளையாடி 5293 ரன்கள் எடுத்துள்ளார்.
கண்ணீருடன் அனைத்து வித கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு அறிவித்த பிராவோ- வைரல் வீடியோ
Published on

வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் டுவைன் பிராவோ. இவர் 2021-ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். அதன்பின்னர் ஐபிஎல் போன்ற டி20 லீக் போட்டிகளில் விளையாடி வந்தார்.

தற்போது வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்று வரும் கரீபியன் பிரீமியர் லீக் தொடரில் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடி வந்தார். 24-ந் தேதி நடைபெற்ற போட்டியின் போது பிராவோவுக்கு காயம் ஏற்பட்டது. இதனையடுத்து பேட்டிங் செய்து கொண்டிருந்த அவர் பாதியில் வெளியேறினார். அந்த போட்டியில் அவர் விளையாடி அணி தோல்வியடைந்தது. அதுதான் அவரது கடைசி போட்டி என ஏற்கனவே அறிவித்திருந்தார்.

இந்நிலையில் அனைத்து வகையான கிரிக்கெட்டிலிருந்து பிராவோ ஓய்வு பெறுவதாக தனது சமூக வலைதள பக்கத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டார்.

இவர் வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக 40 டெஸ்ட், 164 ஒருநாள் போட்டி, 91 டி20 போட்டிகளில் விளையாடி 5293 ரன்கள் எடுத்துள்ளார். இவர் சமீபத்தில் நடந்து முடிந்த டி20 உலகக் கோப்பை தொடரில் ஆப்கானிஸ்தான் அணியின் பந்து வீச்சு பயிற்சியாளராக இருந்தார். அப்போது ஆப்கானிஸ்தான் அணி யாரும் எதிர்பாராத வகையில் அரையிறுதி வரை முன்னேறியது. இதற்கு முக்கிய காரணமாக பிராவோ பார்க்கப்பட்டார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com