சிக்சர் விளாசிய பந்தை குட்டி ரசிகைக்கு பரிசாக வழங்கிய டோனி- வைரலாகும் வீடியோ

கடைசி ஓவரில் களமிறங்கிய டோனி 4 பந்தில் 20 ரன்கள் விளாசினார். இதில் ஹாட்ரிக் சிக்சர் அடங்கும்.
சிக்சர் விளாசிய பந்தை குட்டி ரசிகைக்கு பரிசாக வழங்கிய டோனி- வைரலாகும் வீடியோ
Published on: 

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இன்று நடைபெற்றுவரும் 29-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் மோதி வருகின்றன. இதில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.

அதன்படி முதலில் களமிறங்கிய சென்னை அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 205 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ருதுராஜ் 69 ரன்களும் துபே 66 ரன்களும் எடுத்தனர். கடைசி ஓவரில் களமிறங்கிய டோனி 4 பந்தில் 20 ரன்கள் விளாசினார்.

20 ஓவர் முடிந்த நிலையில் ஓய்வு அறையை நோக்கி டோனி சென்று கொண்டிருந்த போது படியில் அவர் சிக்சர் அடித்த பந்து கிடந்தது. அதனை எடுத்து குட்டி ரசிகைக்கு பரிசாக வழங்கினார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com