டி20 உலகக் கோப்பை: மழையின் காரணமாக பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி தொடங்குவதில் தாமதம்

டி20 உலகக் கோப்பை தொடரின் சூப்பர் 8 சுற்று இன்று தொடங்குகிறது தொடக்க ஆட்டத்தில் நியூசிலாந்து, பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.
டி20 உலகக் கோப்பை: மழையின் காரணமாக பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி தொடங்குவதில் தாமதம்
Published on

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியா மற்றும் இலங்கையில் கடந்த 7-ம் தேதி தொடங்கியது. 20 நாடுகள் பங்கேற்ற இந்தத் தொடரில் நேற்றுடன் லீக் ஆட்டம் முடிவடைந்தது

நடப்பு சாம்பியன் இந்தியா, முன்னாள் சாம்பியன் பாகிஸ்தான் (ஏ பிரிவு) ஜிம்பாப்வே, முன்னாள் சாம்பியன் இலங்கை (பி), முன்னாள் சாம்பியன்கள் வெஸ்ட் இண்டீஸ், இங்கிலாந்து (சி), தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து (டி) ஆகிய நாடுகள் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றன.

இந்நிலையில், டி20 உலகக் கோப்பை தொடரின் சூப்பர் 8 சுற்று இன்று (21-ம் தேதி) தொடங்குகிறது. சூப்பர் 8 சுற்றின் முதல் போட்டி இன்று இரவு 7 மணிக்கு கொழும்பில் நடைபெறுகிறது.

தொடக்க ஆட்டத்தில் நியூசிலாந்து, பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங் தேர்வு செய்தது. இந்நிலையில், மழையின் காரணமாக போட்டி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com