ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நட்சத்திர வீரர்கள் டிரான்ஸ்ஃபரில் முழு வெளிப்படைத்தன்மையை பிசிசிஐ உறுதி செய்ய வேண்டும்: கவாஸ்கர்

ஒவ்வொரு அணியும் தங்கள் வீரர்களுக்கான ஊதிய வரம்பை (salary cap) கடைப்பிடித்ததா அல்லது மீறியதா என்பது மற்ற அணிகளுக்குத் தெரிவதில்லை.
சுனில் கவாஸ்கர்
சுனில் கவாஸ்கர்
Published on

பிரான்சைஸ் அடிப்படையிலான டி20 லீக்கான இந்தியன் பிரிமீயர் லீக் (IPL) பிசிசிஐ-யால் மிகப்பெரிய அளவில் வெற்றிகரமாக நடத்தப்பட்டு வருகிறது. இதில் 10 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.

மூன்று அல்லது நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை மெகா ஏலம் மூலம் வீரர்கள் ஏலம் எடுக்கப்படுவார்கள். அதன்பின் ஒவ்வொரு வருடமும் மினி ஏலம் நடத்தப்படும்.

வீரர்கள் டிரான்ஸ்ஃபர்

தற்போது சில வருடங்களாக மெகா ஏலம், மினி ஏலத்தை தவிர்த்து சீசன் முடிந்த நிலையில் வீரர்கள் இரண்டு அணிகளுக்கு இடையில் உடன்பாடு ஏற்பட்டு Trade என்ற அடிப்படையில் மாற்றப்படுகிறார்கள்.

இந்த சீசனுக்கு முன்னதாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் விளையாடிய சஞ்சு சாம்சன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு வர்த்தகம் ஆனார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடிய ஜடேஜா ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு சென்றார்.

இந்த சீசன் முடிவடைந்த பின்னர் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்காக விளையாடிய ரிஷப் பண்ட் டெல்லி அணிக்கும், டெல்லி அணியில் விளையாடிய குல்தீப் யாதவ் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கும் வர்த்தகம் செய்யப்பட்டுள்ளனர்.

ஹர்திக் பாண்ட்யா

தற்போது ஹர்திக் பாண்ட்யா மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்து வெளியேற இருக்கிறார். அவரை Trade செய்ய 5-க்கும் அதிகமான அணிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

ஆனால் இவர்கள் எவ்வளவு தொகைக்கு Trade செய்யப்படுகிறார்கள் என்று விளக்கம் தெளிவாக இல்லை. இரண்டு அணிகளுக்கு இடையிலான Trade குறித்து மற்ற அணிகளிடமும் தெளிவான புள்ளி விவரங்கள் கிடையாது எனத் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில்தான் சுனில் கவாஸ்கர் வீரர்கள் வர்த்தகத்தில் வெளிப்படைத்தன்மை தேவை என்று வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக சுனில் கவாஸ்கர் கூறியதாவது:-

அணிகளுக்கு இடையே வீரர்கள் மாறக்கூடும் என்பது குறித்து ஊடகங்களில் சில யூகங்கள் நிலவுகின்றன. அந்த மாற்றங்களுக்கான காலக்கெடு முடிவதற்கு இன்னும் சிறிது காலம் உள்ளது. இருப்பினும், ஒரு அணியிலிருந்து மற்றொரு அணிக்கு வீரர் மாறுவது பொதுவெளியில் தெரிந்தாலும், பரிமாற்றம் (trade) நடைபெறும்போது, ​​அது தொடர்பான நிதி விவரங்கள் சம்பந்தப்பட்ட இரண்டு அணிகள், அந்த வீரர் மற்றும் பிசிசிஐ (BCCI) ஆகியோருக்கு மட்டுமே தெரியும்.

இத்தகைய சூழலில், ஒவ்வொரு அணியும் தங்கள் வீரர்களுக்கான ஊதிய வரம்பை (salary cap) கடைப்பிடித்ததா அல்லது மீறியதா என்பது மற்ற அணிகளுக்குத் தெரிவதில்லை. அதனால்தான், முழுமையான வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்த, அந்த நிதி விவரங்களும் பொதுவெளியில் வெளியிடப்பட வேண்டியது அவசியம்.

பொறாமை கொள்பவர்கள்

ஐ.பி.எல். உலகின் மிகச்சிறந்த டி20 லீக் ஆகும். எனவே, அதன் மீது பொறாமை கொள்பவர்கள் யாரும் அதன் மீது பழி சுமத்தாத வகையில், முழுமையான வெளிப்படைத்தன்மை பேணப்படுவது மிகவும் அவசியமாகும்.

இவ்வாறு சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com