ஆசிய போட்டி: மந்தனா, ரிச்சா கோஷ் அதிரடி - 216 ரன்கள் குவித்த இந்தியா

ஸ்மிருதி மந்தனா அரை சதம் கடந்து 79 ரன்னில் அவுட்டானார்.
mandana, shafali
Published on
Summary

ஆசிய போட்டியின் இறுதிப்போட்டியில் ஷபாலி வர்மா, ஸ்மிருதி மந்தனா, ரிச்சா கோஷ் அதிரடியில் இந்திய அணி 216 ரன்கள் குவித்தது.

மகளிருக்கான ஆசிய கோப்பை இறுதிப்போட்டி இன்று நடந்து வருகிறது. இதில் இந்தியா, இலங்கை அணிகள் மோதின.

டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு செய்து ஆடி வருகிறது.

அதன்படி, முதலில் ஆடிய இந்தியா முதல் விக்கெட்டுக்கு 99 ரன்கள் எடுத்திருந்தபோது ஷபாலி வர்மா 48 ரன்னில் ஆட்டம் இழந்தார். 28 பந்தில் 3 சிக்சர், 3 பவுண்டரி உள்பட 48 ரன்கள் குவித்தார்.

தொடர்ந்து ஆடிய ஸ்மிருதி மந்தனா அரை சதம் கடந்து 79 ரன்னில் ஆட்டமிழந்தார். ஹர்மன்பிரீத் கவுர் 19 ரன்னில் அவுட்டானார்.

கடைசி கட்டத்தில் இறங்கிய ரிச்சா கோஷ 22 பந்தில் 3 சிக்சர், 6 பவுண்டரி உள்பட 49 ரன் குவித்தார்.

இறுதியில், இந்திய அணி 20 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 216 ரன்கள் குவித்தது.

இதையடுத்து, 217 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை களமிறங்குகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com