சிஎஸ்கே அணியில் சஞ்சு சாம்சன் இடம்பெறுவது உறுதி: வெளியான தகவல்

ஐபிஎல் 2026-ம் ஆண்டுக்கான மினி ஏலம் வரும் டிசம்பர் மாதம் நடைபெறுகிறது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இருந்த சஞ்சு சாம்சனை வாங்க சென்னை அணி முயற்சி செய்து வருகிறது.
சிஎஸ்கே அணியில் சஞ்சு சாம்சன் இடம்பெறுவது உறுதி: வெளியான தகவல்
Published on

ஐபிஎல் 2026-ம் ஆண்டுக்கான மினி ஏலம் வரும் டிசம்பர் மாதம் நடைபெறுகிறது. இந்த ஏலத்திற்கு முன்பு வீரர்களை தக்க வைத்துக் கொள்ளும் பட்டியலை பிசிசிஐக்கு ஐபிஎல் அணிகள் இம்மாதம் இறுதிக்குள் வழங்க வேண்டும்.

இந்த நிலையில் ஐபிஎல் அணிகள் ஏலத்திற்கு முன்பே தங்களது வீரர்களை வேறு அணிக்கு மாற்றிக் கொள்ள ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

அந்த வகையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இருந்த சஞ்சு சாம்சனை வாங்க சென்னை அணி முயற்சி செய்து வருகிறது. ஆனால் சஞ்சு சாம்சன் வேண்டுமென்றால் தங்களுக்கு ஜடேஜா, துபே, மற்றும் தென் ஆப்பிரிக்க வீரர் பிரேவிஸ் ஆகியோரை கொடுக்க வேண்டும் என ராஜஸ்தான் அணி கூறியது.

இதற்கு சிஎஸ்கே அணி ஒப்புக்கொள்ளவில்லை எனவும் அதற்கு பதிலாக ஜடேஜாவையும் சாம் கரணையும் கொடுப்பதாக சிஎஸ்கே கூற, அதற்கு ஜடேஜாவையும் பதிரனாவையும் தருமாறு ராஜஸ்தான் கூறியது. இதனையும் சிஎஸ்கே மறுத்துள்ளது.

இந்நிலையில் சஞ்சு சாம்சனை சிஎஸ்கேவுக்கு கொடுத்து, ஜடேஜா, சாம் கரணை ராஜஸ்தான் ராயஸ் அணி பெறுவதற்கான வர்த்தகத்திற்கு இரு அணிகளும் ஒப்புக் கொண்டுள்ளதாகவும், ஒப்பந்தப் பணிகள் தொடங்கிவிட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்த தொடர்பான அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு 48 மணி நேரத்தில் வெளியாகும் என தகவல்கள் வெளியாகி உள்ளது. இது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com