இவங்க மவுசு இன்னும் குறையல: டி20 தரவரிசை பட்டியலில் இடம்பிடித்த ரோகித் சர்மா, விராட் கோலி

டி20 உலகக் கோப்பையில் 100 சதவீதம் வெற்றி பெற்ற முதல் கேப்டன் ரோகித் சர்மா. அதிவேகமாக 3,500 ரன்களை கடந்த முதல் வீரர் விராட் கோலி.
இவங்க மவுசு இன்னும் குறையல: டி20 தரவரிசை பட்டியலில் இடம்பிடித்த ரோகித் சர்மா, விராட் கோலி
Published on

புதுடெல்லி:

டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய கேப்டன் ரோகித் சர்மா மற்றும் நட்சத்திர வீரரான விராட் கோலி ஆகியோர் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தனர். இருவரின் ஓய்வு அறிவிப்பு ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

டி20 கிரிக்கெட்டில் அதிக போட்டிகளில் விளையாடியுள்ள ரோகித் சர்மா, டி20 கிரிக்கெட்டில் 50 வெற்றிகளைப் பெற்ற ஒரே கேப்டன் என்ற சாதனையை படைத்தார்.

டி20 கிரிக்கெட்டில் அதிக சதங்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் மேக்ஸ்வெலுடன் முதலிடத்தைப் பகிர்ந்துள்ள ரோகித் சர்மா, டி20 உலகக் கோப்பை தொடரின் அனைத்துப் போட்டிகளிலும் வெற்றிபெற்று கோப்பை வென்ற முதல் கேப்டன் என்ற பெருமையைப் பெற்றார். டி20 கிரிக்கெட்டில் 200 சிக்சர்களை விளாசிய முதல் வீரர் என்ற பெருமையையும் ரோகித் சர்மா பெற்றார்.

இதேபோல், சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக அரை சதம் அடித்த வீரர்கள் பட்டியலில் பாபர் அசாமுடன் முதலிடத்தை பகிர்ந்துள்ள விராட் கோலி டி20 போட்டிகளில் அதிக முறை ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் விருது பெற்றுள்ளார்.

இந்நிலையில், ஓய்வை அறிவித்த நிலையிலும் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலியின் மவுசு இன்னும் குறையவில்லை.

சமீபத்தில் ஐசிசி வெளியிட்ட டி20 தரவரிசைப் பட்டியலில் ரோகித் சர்மா 45வது இடத்திலும், விராட் கோலி 52வது இடத்திலும் நீடிக்கின்றனர்.

ஓய்வு அறிவித்த வீரர்களின் பெயர் பட்டியலில் இருந்து நீக்கப்படும் நிலையில், இவர்களது சாதனைகளால் தரவரிசையில் இன்றும் இடம்பிடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com