

சையத் முஷ்டாக் அலி கோப்பை தொடரில் பரமேஸ்வரன் சிவராமன் அதிரடியில் மத்திய பிரதேசம் அணியை 2 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது புதுச்சேரி.
சையத் முஷ்டாக் அலி கோப்பைக்கான டி20 தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.
பஞ்சாப்பின் மொஹாலியில் இன்று நடந்த போட்டியில் மத்திய பிரதேசம், புதுச்சேரி அணிகள் மோதின. டாஸ் வென்ற புதுச்சேரி அணி பவுலிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய மத்திய பிரதேசம் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 157 ரன்கள் எடுத்தது. ஆரம்பம் முதலே ஹர்ஷ் காவலி பொறுப்புடன் ஆடினார். அரை சதம் கடந்த ஹர்ஷ் காவலி 48 பந்தில் 72 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
புதுச்சேரி சார்பில் பிரனாய் சிங் 4 விக்கெட் வீழ்த்தினார்.
இதையடுத்து, 158 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் புதுச்சேரி அணி களமிறங்கியது. ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடியது.
நடுவரிசையில் களமிறங்கிய பரமேஸ்வரன் சிவராமன் பொறுப்புடன் ஆடினார். அவர் 30 பந்தில் 3 சிக்சர், 3 பவுனட்ரி உள்பட 46 ரன்கள் குவித்து வெற்றிக்கு வழிவகுத்தார்.
இறுதியில், புதுச்சேரி அணி 19.4 ஓவரில் 159 ரன்கள் எடுத்து திரில் வெற்றி பெற்றது.
ஆட்ட நாயகன் விருது பரமேஸ்வரன் சிவராமனுக்கு வழங்கப்பட்டது.