U19 ஆசிய கோப்பை: சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து

கடைசி பந்தில் இந்தியா த்ரில் வெற்றி பெற்றது.
U19 இந்திய அணிக்கு பிரதமர் மோடி பாராட்டு
U19 இந்திய அணிக்கு பிரதமர் மோடி பாராட்டு
Published on: 

19 வயதிற்கு உட்பட்டோருக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி ஓமனில் நடைபெற்றது. இதில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதின.

கடைசி பந்தில் இந்தியா த்ரில் வெற்றி

முதலில் விளையாடிய பாகிஸ்தான் 9 விக்கெட் இழப்பிற்கு 337 ரன்கள் குவித்தது. பின்னர் 338 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் இந்தியா களம் இறங்கியது. ஒரு கட்டத்தில் இந்தியா 8 விக்கெட் இழப்பிற்கு 252 ரன்கள் எடுத்திருந்தது. அதன்பின் 9 விக்கெட் இழப்பிற்கு 309 ரன்கள் எடுத்திருந்தது.

என்றாலும் கடைசி பந்தில் மோஹித் வுல்வா பவுண்டரி அடித்து, இந்தியாவை த்ரில் வெற்றி பெற வைத்தார். வெற்றி பெற்ற இந்திய அணிக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன.

பிரதமர் மோடி வாழ்த்து

இந்திய பிரதமர் மோடியும் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

இந்திய கிரிக்கெட்டுக்கு ஒரு மிகச்சிறப்பான நாள்!

இன்றைய அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி, 19 வயதுக்குட்பட்டோருக்கான (U-19) ஆண்கள் ஆசியக் கோப்பை 2026-ஐ வென்ற நமது இளம் கிரிக்கெட் வீரர்களைக் கண்டு பெருமிதம் கொள்கிறேன். இவர்களின் வெற்றி பல இளைஞர்களுக்கு ஊக்கமளிக்கும்.

அணியின் எதிர்கால முயற்சிகளுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்.

இவ்வாறு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அமித் ஷா வாழ்த்து

அதேபோல் உள்துறை அமித் ஷாவும் வாழ்த்து தெரிவித்துள்ளார். அமித் ஷா தனது எக்ஸ் பக்கத்தில் "த்ரில்லான வெற்றி!

19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசியக் கோப்பையை வென்ற இந்திய கிரிக்கெட் அணிக்கு வாழ்த்துகள்! இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றி, நாட்டிற்கு மிகுந்த மகிழ்ச்சியையும் பெருமையையும் தேடித்தந்துள்ளது.

ஆடுகளத்தில் நீங்கள் வெளிப்படுத்திய மன உறுதி, விடா முயற்சி மற்றும் இணையற்ற விளையாட்டு உணர்வு ஆகியவை, இந்திய கிரிக்கெட்டின் சிறப்பான தரத்திற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக அமைந்தன. உங்கள் இந்தச் செயல்பாடு, வருங்கால கிரிக்கெட் வீரர்கள் பலருக்கு ஊக்கமளித்து, அவர்களையும் வெற்றியாளர்களின் வரிசையில் இணையத் தூண்டும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

X