பெண்கள் ஆசிய கோப்பை கிரிக்கெட்: டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட்டிங் தேர்வு

லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் முதல் இரு இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும்.
pakistan
Published on
Summary

பெண்கள் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட்டிங் தேர்வு செய்தது.

10-வது பெண்கள் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி துபாயில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு மோதுகின்றன.

லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் முதல் இரு இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும்.

அரையிறுதி

ஏ பிரிவில் இடம்பெற்றுள்ள 7 முறை சாம்பியனான இந்திய அணி, தனது முதல் ஆட்டத்தில் தாய்லாந்தையும், 2-வது ஆட்டத்தில் ஹாங்காங்கையும் வீழ்த்தி அரையிறுதியை எட்டியது.

இந்தியா-பாகிஸ்தான்

இந்நிலையில் இந்திய அணி தனது கடைசி லீக்கில் பரம எதிரியான பாகிஸ்தானுடன் இன்று மோதுகிறது. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.

சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இவ்விரு அணிகள் இதுவரை 17 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 14-ல் இந்தியாவும். 3-ல் பாகிஸ்தானும் வெற்றி பெற்றுள்ளன.

X

Maalai Malar
www.maalaimalar.com