ஹாங்காங் சிக்சஸ் தொடர்: 4 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது பாகிஸ்தான்

பாகிஸ்தானின் கவாஜா நபாய் 12 பந்தில் 41 ரன் குவித்தார்.
kawaja nafay
Published on: 
Summary

ஹாங்காங் சிக்சஸ் தொடரில் இந்தியாவை 4 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வென்றது.

ஹாங்காங் சிக்சஸ் தொடர் ஹாங்காங்கில் நடந்து வருகிறது. 'குரூப் சி' லீக் ஆட்டத்தில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் இன்று மோதின. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

ஷசாங்க் 40 ரன்

அதன்படி, முதலில் பேட் செய்த இந்திய அணி 6 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 88 ரன்கள் எடுத்தது. ஷசாங்க் சிங் அதிரடியாக விளையாடி 11 பந்தில் 40 ரன் குவித்தார். இதில் 5 சிக்சர், 2 பவுண்டரி அடங்கும்.

மற்ற வீரர்கள் அவருக்கு ஒத்துழைக்கவில்லை.

பாகிஸ்தான் அதிரடி

இதைத் தொடர்ந்து, 89 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் களமிறங்கியது. கேப்டன் அப்பாஸ் அப்ரிடி 8 பந்தில் 35 ரன் விளாசினார்.

மற்றொரு வீரரான கவாஜா நபாய் 12 பந்தில் 41 ரன் குவித்தார்.

இறுதியில், பாகிஸ்தான் அணி 3.5 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 91 ரன் எடுத்து அபார வெற்றி பெற்றது. ஆட்ட நாயகன் விருது அப்பாஸ் அப்ரிடிக்கு வழங்கப்பட்டது.

X