பேட்டிங் மற்றும் கேப்டன்ஷிப்: சுப்மன் கில்லுக்கு ரகானே புகழாரம்..!

ஒருநாள் கிரிக்கெட்டில் சுப்மன் கில் பேட்டிங்கில் சிறப்பாக விளையாடி வருகிறார்.
சுப்மன் கில்
சுப்மன் கில்
Published on: 

இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருந்த ரோகித் சர்மா நீக்கப்பட்ட பின், சுப்மன் கில் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இவரது தலைமையில் இந்திய அணி சிறப்பாக விளையாடி வருகிறார். அதேவேளையில் சுப்மன் கில்லும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.

இந்த நிலையில் பேட்டிங்கை சிறப்பாக வெளிப்படுத்தும் வரும் நிலையில், கேப்டன்ஷிப்பிலும் சிறப்பாக செயல்பட்டு வருவதாக ரகானே தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ரகானே கூறியதாவது:-

பேட்டிங்கை பொறுத்தவரை, சுப்மன் கில்லின் செயல்பாடு மிகச் சிறப்பாக உள்ளது. அவரது சாதனைகளே அதைப் பறைசாற்றுகின்றன. அவரைப் பற்றியும், அவர் விளையாடும் விதத்தைப் பற்றியும் எனக்கு மிகவும் பிடித்த விஷயம் அவரது தன்னம்பிக்கைதான்.

சுப்மன் கில்லிடம் தெளிவான தன்னம்பிக்கை

அவர் களத்திற்குள் நுழையும் விதம், அவரது அணுகுமுறை, அந்த உறுதிப்பாடு– இவை மிகவும் முக்கியமானவை. ஆட்டத்திறன் மாறக்கூடும்; ஒரு நாள் ரன்கள் எடுக்கலாம், அடுத்த நாள் எடுக்க முடியாமல் போகலாம். ஆனால், சுப்மன் கில்லிடம் அந்த தன்னம்பிக்கை தெளிவாகவே உள்ளது. சமீபகாலமாக அவர் தொடர்ந்து ரன்களையும் குவித்து வருகிறார்.

கேப்டனாக மேம்பட்டு வருகிறார்

மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், ஒவ்வொரு தொடரிலும் அவர் ஒரு கேப்டனாக மேம்பட்டு வருகிறார் என்பதுதான். அவர் வீரர்களை மிகவும் முதிர்ச்சியுடன் கையாளுகிறார். பந்து வீச்சாளர்களை சுழற்சி முறையில் பயன்படுத்துவதோடு, சரியான மாற்றங்களையும் மேற்கொள்கிறார். எனவே, அவர் ஒவ்வொரு தொடரிலும் வளர்ந்து வருகிறார் என்பதற்கான நல்ல அறிகுறிகள் இவை.

இவ்வாறு ரகானே தெரிவித்துள்ளார்.

நியூசிலாந்து தொடர்

இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணி நியூசிலாந்துக்கு எதிராக ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது. 2-வது போட்டி நாளை நடக்கிறது.

X