நாளை 2வது ஒருநாள் போட்டி: நியூசிலாந்துக்கு எதிராக இந்திய அணியின் வெற்றி நீடிக்குமா?

முதல் போட்டியில் 4 வேகப்பந்து வீரர்களுடன் இந்திய அணி களம் இறங்கியது
  இந்திய அணி
Published on: 
Summary

நியூசிலாந்துக்கு எதிராக இந்திய அணி நாளை 2வது ஒருநாள் போட்டியில் விளையாட உள்ளது.

இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. 5 போட்டி கொண்ட 20 ஓவர் தொடரை ஸ்ரேயாஸ் அய்யர் தலைமை யிலான இந்திய அணி 3-2 என்ற கணக்கில் கைப்பற்றியது.

நாளை 2வது போட்டி

இரு அணிகள் இடையிலான 5 ஒருநாள் போட்டி தொடரில் ஆக்லாந்தில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதும் 2- வது ஒருநாள் போட்டி வெல்லிங்டனில் நாளை (7ந் தேதி) நடைபெறுகிறது.

சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணியின் வெற்றி இந்த ஆட்டத்திலும் நீடிக்குமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

விராட் கோலி

கடந்த போட்டியில் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டிலும் செயல்பாடு சிறப்பாக இருந்தது. விராட் கோலியும், அர்ஷ்தீப் சிங்கும் தங்களது முழு திறமையை வெளிப்படுத்தி இருந்தனர்.

கேப்டன் சுப்மன் கில், குர்னூர் பிரார், அன்சுல் கம்போஜ் ஆகியோரும் நல்ல நிலையில் உள்ளனர்.

முதல் போட்டியில் 4 வேகப்பந்து வீரர்களுடன் இந்திய அணி களம் இறங்கியது. அதே மாதிரியே 2-வது ஆட்டத்திலும் விளையாடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முகமது சிராஜ், குல்தீப் யாதவ் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. அணியில் மாற்றம் செய்யப்பட்டால் இடம் பெறலாம் என்று கருதப்படுகிறது.

பதிலடி

சான்ட்னெர் தலைமையிலான நியூசிலாந்து அணி முதல் போட்டியில் ஏற்பட்ட தோல்விக்கு பதிலடி கொடுக்கும் வேட்கையில் உள்ளது. அந்த அணியில் பிலிப்ஸ், ஜேக்கப்டபி ஆகியோர் தொடர்ந்து சிறப்பான நிலையில் உள்ளனர்.

இரு அணிகளும் ஒரு நாள் போட்டியில் 124 முறை மோதியுள்ளன. இதில் இந்தியா 64 ல், நியூசிலாந்து 52 -ல் வெற்றி பெற்றுள்ளன. ஒரு ஆட்டம் டை ஆனது. 7 போட்டி முடிவு இல்லை.

நாளைய போட்டி இந்திய நேரப்படி காலை 7. 30 மணிக்கு தொடங்குகிறது. சோனி ஸ்போர்ட்ஸ் சேனல்களில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

X