சாம்பியன்ஸ் டிராபி: நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் விலகல்- மாற்று வீரர் அறிவிப்பு

சாம்பியன்ஸ் டிராபிக்கான நியூசிலாந்து அணியில் பென் சியர்ஸ் இடம் பெற்றிருந்தார். பென் சியர்ஸ்-க்கு தொடை எலும்பில் காயம் ஏற்பட்டது.
சாம்பியன்ஸ் டிராபி: நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் விலகல்- மாற்று வீரர் அறிவிப்பு
Published on

8 அணிகள் பங்கேற்கும் 9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை தொடர் அடுத்த மாதம் (பிப்ரவரி) 19-ந்தேதி முதல் மார்ச் 9-ந்தேதி வரை பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடக்கிறது. இத்தொடரில் இந்திய அணி பங்கேற்கும் போட்டிகள் மட்டும் துபாயில் நடைபெறவுள்ளது.

பிப்ரவரி 19-ந்தேதி கராச்சியில் தொடங்கும் முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் பாகிஸ்தான் அணி, நியூசிலாந்தை சந்திக்கிறது.

சாம்பியன்ஸ் டிராபி தொடங்க இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் ஒவ்வொரு அணியில் இருந்து முக்கிய வீரர்கள் காயம் காரணமாக விலகி வருகின்றனர்.

அந்த வகையில் சாம்பியன்ஸ் டிராபிக்கான நியூசிலாந்து அணியில் இடம் பெற்றிருந்த வேகப்பந்து வீச்சாளர் பென் சியர்ஸ் தொடை எலும்பில் ஏற்பட்ட காயம் காரணமாக சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இருந்து விலகியுள்ளார். அவருக்கு மாற்று வீரராக ஜேக்கப் டஃபியை நியூசிலாந்து அணி அறிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com