தேசிய மகள்கள் தினம் - சிஎஸ்கே அணி பகிர்ந்த கியூட் படம்

செப்டம்பர் மாதம் 22 ஆம் தேதி தேசிய மகள்கள் தினம் கொண்டாடப்படுகிறது.மகள்கள் தினத்தை முன்னிட்டு சிஎஸ்கே அணி தனது எக்ஸ் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளது.
happy Daughters Day - csk
Published on: 

இந்தியாவில் இன்று தேசிய மகள்கள் தினம் கொண்டாடப்படுகிறது.

இந்திய குடும்பங்களில் மகன்களுக்கே முன்னுரிமை கொடுக்கப்படும் நிலையில், மகள்களை கொண்டாடும் விதமாக செப்டம்பர் மாதம் 22 ஆம் தேதி மகள்கள் தினம் கொண்டாடப்படுகிறது.

இந்நிலையில் மகள்கள் தினத்தை முன்னிட்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரர்கள் தங்கள் மகள்களுடன் இருக்கும் புகைப்படத்தை சிஎஸ்கே அணி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளது.

அந்த பதிவில், நம் வாழ்க்கையை மகிழ்ச்சி மற்றும் அன்பினால் நிரப்பும் மகள்களை கொண்டாடும் மகள்கள் தினத்திற்கு வாழ்த்துக்கள்" என்று பதிவிடப்பட்டுள்ளது. 

X

Maalai Malar
www.maalaimalar.com