ரஞ்சி போட்டியில் ஒரே இன்னிங்சில் 10 விக்கெட்டுகள் எடுத்த வீரரை தட்டி தூக்கிய சென்னை அணி

ரஞ்சி போட்டியில் அரியானா அணிக்காக வேகப்பந்து வீச்சாளர் அன்ஷுல் கம்போஜ் விளையாடி வருகிறார்.ரஞ்சி போட்டியில் ஒரே இன்னிங்சில் 10 விக்கெட்டுகளையும் வீழ்த்தி அன்ஷுல் கம்போஜ் அசத்தினார்.
ரஞ்சி போட்டியில் ஒரே இன்னிங்சில் 10 விக்கெட்டுகள் எடுத்த வீரரை தட்டி தூக்கிய சென்னை அணி
Published on

ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடருக்கான மெகா ஏலம் சவுதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில் துவங்கியது. இந்த ஏலத்தில் 574 வீரர்கள் கலந்து கொள்கின்றனர். முதல் நாள் ஏலம் பல கட்டங்களாக நேற்று நடைபெற்றது. ஐபிஎல் வரலாற்றில் முதல் முறையாக ரிஷப் பண்ட் ரூ. 27 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டார்.

இந்நிலையில், இன்று இரண்டாம் நாள் ஏலம் தொடங்கி நடைபெற்று வருகிறது. மும்பை அணியின் முன்னாள் பந்துவீச்சாளர் அன்ஷுல் கம்போஜ்-ஐ 3.4 கோடி ரூபாய்க்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது. இவரின் அடிப்படை விலையாக ரூ.30 லட்சம் நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

அண்மையில், ரஞ்சி போட்டியில் ஒரே இன்னிங்சில் 10 விக்கெட்டுகளையும் வீழ்த்தி அன்ஷுல் கம்போஜ் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com