ஐசிசி தலைவராக ஜெய் ஷா போட்டியின்றி தேர்வு

ஜெய் ஷா, 2024 டிசம்பர் 1 முதல் ஐ.சி.சி. தலைவராக பொறுப்பேற்க உள்ளார். 35 வயதான ஜெய் ஷா, மிக இளம் வயதில் ஐ.சி.சி. தலைவரானார் என்ற சாதனையை பதிவு செய்துள்ளார்.
jay shah icc chairman
Published on

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பி.சி.சி.ஐ.) பொதுச் செயலாளரும், மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவின் மகனுமான ஜெய்ஷா சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.) தலைவராக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

2019 அக்டோபர் முதல் பிசிசிஐ கெளரவ செயலாளராகவும், 2021 ஜனவரி முதல் ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராகவும் பணியாற்றிய ஜெய் ஷா, 2024 டிசம்பர் 1 முதல் ஐ.சி.சி. தலைவராக பொறுப்பேற்க உள்ளார்.

தற்போது சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.) தலைவராக நியூசிலாந்தை சேர்ந்த கிரேக் பார்கிளே இருக்கிறார். 2020-ம் ஆண்டு நவம்பர் 24-ந்தேதி அவர் அந்த பொறுப்பை ஏற்றார். வருகிற நவம்பர் 30-ந்தேதியுடன் அவரது 4 ஆண்டு காலம் பதவி முடிகிறது.

3 முறை அந்த பதவியில் இருந்த அவர் மேலும் அதில் நீடிக்க விரும்பவில்லை. ஐ.சி.சி. சேர்மன் பதவியில் இருந்து விலக முடிவு செய்துள்ளார். இதனையடுத்து, ஐசிசி தலைவராக ஜெய் ஷா போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ஏற்கனவே இந்தியாவை சேர்ந்த ஜக்மோகன் டால் மியா, சரத் பவார். என்.சீனிவாசன், ஷசாங்க் மனோகர் போன்றவர்கள் ஐ.சி.சி. தலைமை பதவி வகித்தனர். அந்த வரிசையில் ஜெய்ஷாவும் இணைந்துள்ளார். 35 வயதான ஜெய் ஷா, மிக இளம் வயதில் ஐ.சி.சி. தலைவரானவர் என்ற சாதனையை பதிவு செய்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com