ஆப்கானிஸ்தான் உடனான டி20 தொடர்: உடற்தகுதி பெற்ற ஜஸ்பிரித் பும்ரா

வாஷிங்டன் சுந்தருக்கு உடல் தகுதி அனுமதி கிடைத்தது.
bumrah
Published on
Summary

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணியின் ஆல்-ரவுண்டரான பும்ரா உடற்தகுதி பெற்றுள்ளார்.

இந்தியா-ஆப்கானிஸ்தான் அணிகள் இடையிலான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் டெல்லியில் வரும் 13, 15 மற்றும் 17 ஆகிய தேதிகளில் நடக்கிறது.

ஜஸ்பிரித் பும்ரா

ஆப்கானிஸ்தான் தொடருக்கான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. ஷ்ரேயஸ் அய்யர் தலைமையிலான அணியில் வேகப்பந்து வீரர் ஜஸ்பிரீத் பும்ரா இடம்பெற்றுள்ளார்.

32 வயதான அவர் கடைசியாக ஜூலை 16-ம் தேதி இங்கிலாந்துக்கு எதிரான டி20 போட்டியில் ஆடினார். அதன்பின், காயம் காரணமாக அவர் சர்வதேச போட்டியில் விளையாட வில்லை. அவரது உடல் தகுதி குறித்து தொடர்ந்து கேள்விக்குறியாகவே இருந்து வருகிறது.

கிரிக்கெட் வாரியத்தின் மருத்துவ குழுவிடம் இருந்து அவருக்கு இன்னும் உடல் தகுதிக்கான அனுமதி கிடைக்கவில்லை. பும்ராவுக்கு மாற்று வீரராக பிரின்ஸ் யாதவை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் தேர்வு செய்துள்ளது.

தகுதிபெற்ற வாஷிங்டன் சுந்தர்

இதற்கிடையே, ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சு ஆல்-ரவுண்டரான வாஷிங்டன் சுந்தர் முழு உடற்தகுதியை நிரூபித்துள்ளார். இதனால் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான தொடரில் அவர் விளையாடுவது உறுதியாகியது.

இந்நிலையில், இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்பிரித் பும்ரா தற்போது உடல்தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளதால், இந்திய அணிக்கு மிகப்பெரிய பலமாக அவரது வருகை அமைந்துள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com