சிஎஸ்கே-யில் டோனி பேட்ஸ்மேனாக முக்கிய பங்கு வகிப்பார்- ஸ்டீபன் பிளமிங்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனான டோனி பேட்ஸ்மேனாக முக்கிய பங்கு விகிப்பார் என்று பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் கூறியுள்ளார். #IPL2018 #CSK #MSDhoni
சிஎஸ்கே-யில் டோனி பேட்ஸ்மேனாக முக்கிய பங்கு வகிப்பார்- ஸ்டீபன் பிளமிங்
Published on

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் டோனி, இந்திய அணிக்கான டி20 போட்டியில் முதல் நான்கு இடத்தில் களம் இறங்குவதில்லை. ஆனால், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் பேட்ஸ்மேனாக முக்கிய பங்கு வகிப்பார் என்று அந்த அணியின் தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் கூறியுள்ளார்.

இதுகுறித்து ஸ்டீபன் பிளமிங் கூறுகையில் ‘‘எம்எஸ் டோனி டாப் ஆர்டரில்தான் களம் இறங்குவார். அதேபோல் அணியை சூழ்நிலையை குறித்து தேர்வு செய்வோம். எப்படி என்றாலும் அவர் பேட்ஸ்மேனாக முக்கிய பங்கு வகிப்பார். கேதர் ஜாதவ், அம்பதி ராயுடு ஆகியோரும் டோனியுடன் உள்ளனர். ஜடேஜா, பிராவோ, ஹர்பன்சிங், கரண் ஷர்மா ஆகியோரும் உள்ளனர். இவர்களாலும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த முடியும். எங்கள் அணியில் பலமுனை திறமை கொண்ட வீரர்கள் உள்ளனர். ஏராளமான ஆப்சன் உள்ளன.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com