மயங்க் யாதவ்- விராட் கோலி மோதுவதை பார்க்க ஆவலாக உள்ளேன்: ஸ்டூவர்ட் பிராட்

மயங்க் யாதவ் விளையாடிய முதல் ஐபிஎல் போட்டியிலேயே அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். வேகப்பந்து வீச்சாளரான அவர் 155.8 கி.மீ வேகத்தில் பந்து வீசி அசத்தியுள்ளார்.
மயங்க் யாதவ்- விராட் கோலி மோதுவதை பார்க்க ஆவலாக உள்ளேன்: ஸ்டூவர்ட் பிராட்
Published on

பெங்களூரு:

17-வது ஐ.பி.எல். சீசனின் இன்றைய 15-வது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும் மோதுகிறது. இதில் டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.

அதன்படி லக்னோ அணி பேட்டிங் செய்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் இந்த போட்டியில் லக்னோ அணி வீரர் மயங்க் யாதவ் மற்றும் விராட் கோலி மோதுவதை பார்க்க ஆவலாக உள்ளதாக இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் ஸ்டூவர்ட் பிராட் கூறியுள்ளார்.

மயங்க் யாதவ் விளையாடிய முதல் ஐபிஎல் போட்டியிலேயே அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். வேகப்பந்து வீச்சாளரான அவர் 155.8 கி.மீ வேகத்தில் பந்து வீசி அசத்தியுள்ளார். பந்து வீச்சில் அசத்தி வரும் மயங்க் அகர்வாலும் பேட்டிங்கில் கிங்காக இருக்கும் விராட் கோலியும் மோதுவதை பார்க்க ரசிகர்களும் ஆவலாக இருப்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com