டி20 உலகக் கோப்பை: சாதனை படைத்த இந்தியா, பாகிஸ்தான் போட்டி

இந்தியா, பாகிஸ்தான் லீக் போட்டி கடந்த ஞாயிற்றுக்கிழமை கொழும்பில் நடைபெற்றது. இதில் இந்திய அணி 61 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
டி20 உலகக் கோப்பை: சாதனை படைத்த இந்தியா, பாகிஸ்தான் போட்டி
Published on

புதுடெல்லி:

டி20 உலகக் கோப்பையில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியா, பாகிஸ்தான் லீக் போட்டி கடந்த ஞாயிற்றுக்கிழமை கொழும்பில் நடைபெற்றது.

இந்தப் போட்டி மைதானத்தில் மட்டுமல்லாமல் டிஜிட்டல் தளங்களிலும் புதிய சரித்திரம் படைத்துள்ளது.

இதுதொடர்பாக, ஜியோஸ்டார் நிறுவனம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, ஜியோ ஹாட்ஸ்டார் தளத்தில் மட்டும் இந்தப் போட்டியை 16.3 கோடி பேர் நேரலையில் கண்டு ரசித்துள்ளனர். இது ஐசிசி டி20 வரலாற்றில் ஒரு போட்டிக்குக் கிடைத்த அதிகபட்ச பார்வையாளர்கள் ஆகும்.

கடந்த 2024 டி20 உலகக் கோப்பையில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா இடையிலான இறுதிப்போட்டி பெற்ற பார்வையாளர்களின் எண்ணிக்கையை விட இந்தப் போட்டி அதிக வரவேற்பைப் பெற்றுள்ளது.

இந்தப் போட்டியில், இந்திய அணி 61 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com