முகம் முழுக்க கேக்.. இந்திய அணியுடன் பிறந்தநாள் கொண்டாடிய அஷ்வின்

பிறந்த நாள் கொண்டாட்டத்தில் இந்திய அணியினர் கலந்து கொண்டனர். இதைத் தொடர்ந்து அனைவரும் மாறி மாறி கேக்-ஐ முகத்தில் பூசிக் கொண்டனர்.
முகம் முழுக்க கேக்.. இந்திய அணியுடன் பிறந்தநாள் கொண்டாடிய அஷ்வின்
Published on

இந்திய கிரிக்கெட்டில் தலைசிறந்த சுழற்பந்து வீச்சாளர்களில் ஒருவர் ரசிச்சந்திரன் அஷ்வின். அஷ்வின் இன்று 38 ஆவது பிறந்தநாள் கொண்டாடினார். அஷ்வினின் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் இந்திய அணியினர் கலந்து கொண்டனர்.

வங்கதேசம் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டி காரணமாக சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இந்திய அணி பயிற்சி செய்த நிலையில், அஷ்வினின் பிறந்த நாள் கொண்டாட்டம் மைதானத்தின் டிரெசிங் ரூமிலேயே நடைபெற்றது. இதில் இந்திய வீரர்கள் அஷ்வின் முகத்தில் கேக்கை பூசினர். இதைத் தொடர்ந்து அனைவரும் மாறி மாறி கேக்-ஐ முகத்தில் பூசிக் கொண்டனர்.

அதன்பிறகு அஷ்வின் கேக்-ஐ வெட்ட அணியினர் அனைவரும் அவரை வாழ்த்தி பாடினர். அஷ்வின் பிறந்த நாள் கொண்டாட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com