

இன்று நடக்கும் இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டியில் டாஸ்க் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.
இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்து நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 5 போட்டி கொண்ட டி20 தொடரில் கிறிஸ்ட்சர்ச்சில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
இந்த நிலையில், இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதும் இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டி கிறிஸ்ட்சர்ச் மைதானத்தில் இன்று தொங்கியுள்ளது. முதல் போட்டியை போன்றே இன்றைய ஆட்டத்திலும், ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான இந்திய அணியின் அதிரடி தொடருமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், இன்றைய போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. இதில் இந்திய அணி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது.
இதைதொடர்ந்து, முதலில் பேட்டிங் செய்ய நியூசிலாந்து அணி களமிறங்கியுள்ளது.
நியூசிலாந்து அணி முதல் போட்டியில் ஏற்பட்ட தோல்விக்கு பதிலடி கொடுக்கும் நோக்கில் இன்று களமிறங்கி உளள்தால், இன்றைய ஆட்டம் சூடு பிடிக்கும் என்றும் எதிர்பார்க்கப்டுகிறது.