சர்வதேச மாஸ்டர்ஸ் லீக்: வெஸ்ட் இண்டீசை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது இந்தியா

முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 148 ரன்கள் எடுத்தது.அடுத்து ஆடிய இந்தியா 149 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.
சர்வதேச மாஸ்டர்ஸ் லீக்: வெஸ்ட் இண்டீசை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது இந்தியா
Published on

ராய்ப்பூர்:

முதலாவது சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்றது.

மொத்தம் 6 அணிகள் பங்கேற்ற இந்தத் தொடரில் இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறின.

இந்நிலையில், ராய்ப்பூரில் இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் பேட்டிங் தேர்வு செய்தார்.

அதன்படி, முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 148 ரன்கள் எடுத்தது.

தொடக்க ஆட்டக்காரர் டுவைன் சுமித் 45 ரன்களில் ஆட்டமிழந்தார். ஓரளவு நிலைத்து விளையாடி அரை சதம் கடந்த சிம்மன்ஸ் 57 ரன்னில் ஆட்டமிழந்தார்.

இந்தியா சார்பில் வினய் குமார் 3 விக்கெட்டும், ஷபாஸ் நதீம் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதையடுத்து, 149 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இந்தியா களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் அம்பதி ராயுடு அதிரடியாக ஆடி அரை சதம் கடந்தார். அவர் 50 பந்தில் 74 ரன்கள் எடுத்து அவுட்டானார். சச்சின் 25 ரன்னில் ஆட்டமிழந்தார்.

இறுதியில், இந்தியா 17.1 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 149 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது. ஆட்ட நாயகன் விருது அம்பதி ராயுடுவுக்கு வழங்கப்பட்டது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com