2-வது டி20 போட்டி.. ஜனவரி 25 அன்று சென்னை மெட்ரோ ரெயிலில் ரசிகர்கள் இலவசமாக பயணிக்கலாம்

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கும் இடையிலான முதல் டி20 போட்டி நாளை நடைபெறுகிறது.2 ஆவது டி20 போட்டி ஜனவரி 25 ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
2-வது டி20 போட்டி.. ஜனவரி 25 அன்று சென்னை மெட்ரோ ரெயிலில் ரசிகர்கள் இலவசமாக பயணிக்கலாம்
Published on

இந்தியா - இங்கிலாந்து ஆகிய அணிகள் 5 டி20 போட்டி மற்றும் 3 ஒருநாள் போட்டியில் விளையாட உள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டி20 போட்டி நாளை கொல்கத்தாவில் நடைபெறுகிறது.

இதனையடுத்து 2 ஆவது டி20 போட்டி வரும் 25 ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

இந்நிலையில், சென்னை சேப்பாக்கத்தில் வரும் 25ம் தேதி நடக்கும் இந்தியா - இங்கிலாந்து இடையிலான 2-வது டி20 போட்டியைக் காண வரும் ரசிகர்கள் மெட்ரோ ரெயிலில் இலவசமாக பயணிக்கலாம் என தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் அறிவித்துள்ளது.

அன்றைய நாளில் மெட்ரோ ரெயில் நிலையங்களில் போட்டிக்கான டிக்கெட்டை மட்டும் காண்பித்து இலவசமாக பயணிக்கலாம்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com