சிஎஸ்கே அணியில் கோச்சிங் ஸ்டாஃப் ஆக இணையும் கரேத் பத்தி: யார் இவர்?

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக ஜாகிர்கான் நியமிக்கப்பட்டுள்ளார்.
கரேத் பத்தி
கரேத் பத்தி
Published on: 

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த நியூசிலாந்தை சேர்ந்த ஸ்டீபன் பிளமிங் தனது பதவியில் இருந்து விலகினார். அவரைத் தொடர்ந்து பேட்டிங் பயிற்சியாளர், பந்து வீச்சு பயிற்சியாளர் என பலர் விலகி வருகின்றனர்.

ஜாகிர்கான்

ஸ்டீபன் பிளமிங் விலகியதைத் தொடர்ந்து ஜாகிர்கான் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் தனக்கு தேவையான சப்போர்ட் ஸ்டாஃப்களை தேர்வு செய்து வருகிறார்.

பந்து வீச்சு பயிற்சியாளராக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் மோகித் சர்மா நியமனம் செய்யப்பட இருப்பதாக ஏற்கனவே தகவல் வெளியானது.

கரேத் பத்தி

இந்த நிலையில், இங்கிலாந்தில் உள்ள சர்ரே அணியின் பயிற்சியாளராக இருந்த கரேத் பத்தி (Gareth Batty) துணைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இவர் ஏற்கனவே சர்ரே அணிக்காக விளையாடியவர். விளையாட்டில் இருந்து ஓய்வு பெற்றதும் கடந்த 2021-ம் ஆண்டு பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். 2022 முதல் 2024 வரை தொடர்ந்து மூன்று முறை சர்ரே கவுன்ட்டி சாம்பியன்ஷிப்பை கைப்பற்றியது. 2025-ல் 2-வது இடம் பிடித்தது. இந்த வருடம் அந்த அணிக்கு கடினமாக இருந்தது.

சர்ரே 21 வருடங்களாக சர்ரே அணியுடன் பயணம் செய்துள்ளார். 1998 முதல் 2001 வரை சர்ரே அணிக்காக விளையாடினார். 2015 முதல் 2017 வரை கேப்டனாக செயல்பட்டுள்ளார்.

ஜாகிர்கான் சர்ரே அணிக்காக விளையாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com