#BabarAzam வங்கதேசத்துக்கு எதிரான ஒருநாள் தொடர்: பாபர் அசாம் உள்ளிட்ட 4 முக்கிய வீரர்கள் அதிரடி நீக்கம்

மாஸ் சதாகத், ஷமில் ஹூசைன், காஜி கோரி, சாத் மசூத், அப்துல் சமாத் ஆகிய புதுமுக வீரர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.பாபர் அசாம் உள்ளிட்ட 4 முக்கிய வீரர்கள் கழற்றி விடப்பட்டனர்.
#BabarAzam வங்கதேசத்துக்கு எதிரான ஒருநாள் தொடர்: பாபர் அசாம் உள்ளிட்ட 4 முக்கிய வீரர்கள் அதிரடி நீக்கம்
Published on

லாகூர்:

20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட்டில் சூப்பர் சுற்றோடு வெளியேறிய பாகிஸ்தான் அணி அடுத்ததாக வருகிற 9-ந்தேதி முதல் வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது.

ஒருநாள் ஆட்டங்கள் டாக்காவில் மார்ச்.11, 13 மற்றும் 15-ந்தேதிகளில் நடக்கிறது. இதற்கான பாகிஸ்தான் அணி நேற்று அறிவிக்கப்பட்டது. உலகக்கோப்பை தோல்வி எதிரொலியாக அணியில் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. மாஸ் சதாகத், ஷமில் ஹூசைன், காஜி கோரி, சாத் மசூத், அப்துல் சமாத் ஆகிய புதுமுக வீரர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.

வேகப்பந்து வீச்சாளர் ஹாரிஸ் ரவுப் மீண்டும் அழைக்கப்பட்டுள்ளார். முன்னாள் கேப்டன் பாபர் அசாம், பஹர் ஜமான், சைம் அயூப், நசீம் ஷா உள்ளிட்டோர் கழற்றி விடப்பட்டனர்.

பாகிஸ்தான் அணி வருமாறு:-

ஷகீன் ஷா அப்ரிடி (கேப்டன்), அப்துல் சமாத், அப்ரார் அகமது, பகீம் அஷ்ரப், பைசல் அக்ரம், ஹாரிஸ் ரவுப், ஹூசைன் தலாத், மாஸ் சதாகத், முகமது ரிஸ்வான், முகமது வாசிம், காஜி கோரி, சாத் மசூத் சஹிப்சதா பர்ஹான், சல்மான் அலி ஆஹா, ஷமில் ஹூசைன்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com