14 ஒருநாள் போட்டிகளில் தொடர்ந்து வெற்றி... புதிய சாதனை படைத்த ஆஸ்திரேலியா

இலங்கை அணி தொடர்ச்சியாக 13 ஒருநாள் போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது.இலங்கையை பின்னுக்கு தள்ளி ஆஸ்திரேலியா 14 ஒருநாள் போட்டிகளில் வெற்றி.
aus odi cricket
Published on

இங்கிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது.

முதல் 2 ஒருநாள் போட்டிகளில் வெற்றி பெற்று 2 - 0 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா இத்தொடரில் முன்னிலை வகித்துள்ளது.

இந்நிலையில், தொடர்ச்சியாக 14 ஒருநாள் போட்டிகளில் வெற்றி பெற்று ஆஸ்திரேலியா அணி புதிய சாதனை படைத்துள்ளது.

ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் தொடர்ச்சியாக அதிக வெற்றிகள் பெற்ற 2 ஆவது அணி என்ற சாதனையை இதன்மூலம் ஆஸ்திரேலியா பெற்றுள்ளது.

இதற்கு முன்னதாக ஜூன் 2023 முதல் அக்டோபர் 2023 வரை இலங்கை அணி தொடர்ச்சியாக 13 ஒருநாள் போட்டிகளில் வெற்றி பெற்றிருந்தது.

2003 ஆம் ஆண்டு தொடர்ச்சியாக 21 ஒருநாள் போட்டிகளில் வெற்றி பெற்று ஆஸ்திரேலியா அணி முதலிடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com