சேப்பாக்கம் டெஸ்ட்: கும்ப்ளே சாதனையை முறியடித்த அஷ்வின்

அஸ்வின் 2 ஆவது இன்னிங்சில் 96 விக்கெட்டுகள் வீழ்த்தி கும்ப்ளே சாதனையை முறியடித்தார்.அதிக முறை 5 விக்கெட்டுகள் வீழ்த்தியர்கள் பட்டியலில் ஷேன் வார்னே சாதனையை அஷ்வின் சமன் செய்துள்ளார்.
ashwin test record kumble warne
Published on

சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்று வந்த டெஸ்ட் போட்டியில் வங்கதேச அணியை 280 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றி பெற்றது.

இப்போட்டியில் முதல் இன்னிங்சில் சதம் விளாசிய அஷ்வின் 2 ஆவது இன்னிங்சில் 6 விக்கெட்டுகள் வீழ்த்தி இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தார்.

2 ஆவது இன்னிங்சில் 6 விக்கெட்டுகள் வீழ்த்தியதன் மூலம் இந்தியா சார்பில் 2 ஆவது இன்னிங்சில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய பந்துவீச்சாளர் என்ற சாதனையை அஷ்வின் படைத்துள்ளார்.

இந்தியா சார்பில் 2 ஆவது இன்னிங்சில் 94 விக்கெட்டுகள் வீழ்த்திய அனில் கும்ப்ளேவின் சாதனையை 96 விக்கெட்டுகள் வீழ்த்தி அஷ்வின் முறியடித்துள்ளார்.

மேலும், டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக முறை 5 விக்கெட்டுக்குள் வீழ்த்தியவர்கள் பட்டியலில் கிரிக்கெட் ஜாம்பவான் ஷேன் வார்னே சாதனையை அஷ்வின் சமன் செய்துள்ளார்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக முறை 5 விக்கெட்டுகள் வீழ்த்தியவர்களின் பட்டியலில் அஷ்வின் 2 ஆம் இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக முறை 5 விக்கெட்டுகள் வீழ்த்தியவர்களின் பட்டியல்:

67 - முத்தையா முரளிதரன்

37 - ரவிச்சந்திரன் அஸ்வின்

37 - ஷேன் வார்னே

36 - ரிச்சர்ட் ஹாட்லீ

35 - அனில் கும்ப்ளே

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com