

ஹாங்காங் சிக்சஸ் போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி ஆப்கானிஸ்தான் அணி சாம்பியன் பட்டம் வென்றது.
ஹாங்காங் சர்வதேச சிக்சஸ் (6 பேர் பங்கேற்கும் 6 ஓவர் போட்டி) கிரிக்கெட் போட்டி ஹாங்காங்கில் நடைபெற்றது. இதில் மோங் கோக்கில் இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின.
இந்தப் போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி 6 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 115 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் மேக்ஸ் பிரெண்ட் 44 ரன்கள் எடுத்தார்.
தொடர்ந்து ஆடிய ஆப்கானிஸ்தான் அணி வீரர்கள் அதிரடியாக விளையாடி ரன்கள் குவித்தனர். அந்த அணியின் இம்ரான் மிர் 14 பந்தில் 53 ரன் குவித்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.
இறுதியில், ஆப்கானிஸ்தான் அணி 5.1 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 119 ரன்கள் குவித்து அபார வெற்றி பெற்றதுடன், ஹாங்காங் சிக்சஸ் கோப்பையை கைப்பற்றியது.