

இந்தியா- ஆஸ்திரேலியா இடையேயான நட்புறவை மேலும் வலுப்படுத்தும் வகையில் டிசம்பர் 12-ந்தேதி பிக்பாஷ் கிரிக்கெட் லீக்கின் முதல் ஆட்டம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது.
இதில் மெல்போர்ன் - ரெனிகேட்ஸ் - பெர்த் ஸ்கார்செர்ஸ் அணிகள் மோதுகின்றன. இதையொட்டி ஜி டே நமஸ்தே என்ற பெயரில் ஒரு வார கால திருவிழாவை ஆஸ்திரேலியா நடத்துகிறது.
வருகிற 7-ந் தேதி முதல் 12-ந் தேதி வரை டெல்லி, மும்பை, சென்னை, பெங்களூரு, கொல்கத்தா, கோகிமா (நாகாலாந்து) ஆகிய நகரங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
நிறைவாக சேப்பாக்கத்தில் பிக்பாஷ் லீக் தொடக்க ஆட்டம் நடக்கிறது. இதுதொடர்பான அறிவிப்பு நிகழ்ச்சி சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது.
இதில், இந்தியாவுக்கான ஆஸ்திரேலிய தூதர் பிலிப் கிரீன், துணைத் தூதர் சிலாய் ஜாகி, தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவர் டி.ஜெ. சீனிவாச ராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவர் சீனிவாச ராஜ் கூறும்போது,"பிக்பாஷ் லீக் முதல் ஆட்டத்துக்கான டிக்கெட்டுகள் விற்பனை நடைபெற்று வருகிறது. இதுவரை 9,000 டிக்கெட்டுகளுக்கு மேல் விற்பனையாகி உள்ளது" என்றார்.