வயதுக்கும், விளையாட்டிற்கும் சம்பந்தம் இல்லை - ஒருநாள் உலகக் கோப்பை அணியில் Ro-Ko இணை இடம்பெறுவது குறித்து பிசிசிஐ தலைவர் கருத்து!

உடற்தகுதி மற்றும் செயல்திறனே தேர்வுக்கான அளவுகோலாக இருக்க வேண்டும்.
வயதுக்கும், விளையாட்டிற்கும் சம்பந்தம் இல்லை - ஒருநாள் உலகக் கோப்பை அணியில் Ro-Ko இணை இடம்பெறுவது குறித்து பிசிசிஐ தலைவர் கருத்து!
Published on: 

2027 ஒருநாள் உலகக் கோப்பைக்கு விராட் கோலி மற்றும் ரோகித் சர்மாவை தேர்வு செய்வதற்கு அவர்களது வயது ஒரு தடையாக இருக்காது என்றும், அந்நேரத்திற்கான அவர்களின் உடற்தகுதி மற்றும் செயல்திறனே மதிப்பிடப்படும் என்று பிசிசிஐ தலைவர் மிதுன் மன்ஹாஸ் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக பத்திரிக்கை நிறுவனம் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ள அவர்.,

“என் பார்வையில், உடற்தகுதி மற்றும் செயல்திறனே தேர்வுக்கான அளவுகோலாக இருக்க வேண்டும், நிச்சயமாக வயது அல்ல. ஒருவர் விளையாடுவதற்குத் தகுதியுடன் இருந்து, சிறப்பாகச் செயல்பட்டு, நாட்டிற்காகப் போட்டிகளில் வெற்றி பெற்றுத் தந்தால், அதுவே நாம் கவனம் செலுத்த வேண்டிய ஒரே அளவுகோலாக இருக்க வேண்டும்.” என தெரிவித்தார்.

2027 ஒருநாள் உலகக் கோப்பை

நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இந்தத் தொடர், அடுத்த ஆண்டு அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் தென்னாப்பிரிக்கா, ஜிம்பாப்வே மற்றும் நமீபியாவில் நடைபெறும்.

இந்த உலகக் கோப்பை தொடரில் இருவரும் இடம்பெற்றால், இது அவர்களின் கடைசி ஒருநாள் உலகக் கோப்பைத் தொடராக இருக்கும் என கூறப்படுகிறது.

2027 ஏப்ரலில் ரோகித் சர்மா 40 வயதை எட்டுவார். விராட் கோலிக்கு 38 வயதாக இருக்கும். ஏற்கனவே ரோகித், விராட் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் சர்வதேச டி20 போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com