

இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான 3-வது டி20 போட்டி இன்று (அக்.11) இந்தூரில் உள்ள ஹோல்கர் கிரிக்கெட் மைதானத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இப்போட்டியில் டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணியின் கேப்டன் ஷை ஹோப் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 223 ரன்கள் குவித்துள்ளது.
அதிரடியாக விளையாடிய அபிஷேக் சர்மா 30 பந்துகளில் 5 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகள் என 69 ரன்கள் குவித்தார். மேற்கிந்தியத் தீவுகள் அணி தரப்பில் ரோஸ்டன் சேஸ், சமர் ஜோசப், சமர் ஸ்பிரிங்கர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
தொடர்ந்து மேற்கிந்திய தீவுகள் அணி விளையாட உள்ளது. இதுவரை இரண்டு டி20 போட்டிகள் நடைபெற்று நிலையில் 1-1 என்ற கணக்கில் தொடர் சமநிலையில் உள்ளது.