

ஆரவாரமான வாரம். பூர்வ புண்ணிய ஸ்தான அதிபதி செவ்வாயும் பாக்கிய ஸ்தான அதிபதி சூரியனும் பரிவர்த்தனை பெறுகிறார்கள் முன்னோர்களின் நல்லாசியையும், குல தெய்வ அருளையும் பெற்றுத் தரவிருக்கும் ஆரவாரமான வாரம். உத்தியோகத்தில் பதவி உயர்வு, ஊதிய உயர்வு ஏற்படும். தடைபட்ட வேலை கிடைக்கும். வேலையாட்களால் ஏற்பட்ட தொல்லைகள் அகலும். தன வரவில் தன்னிறைவு உண்டாகும். அடமான நகைகள், சொத்துக்களை மீட்பீர்கள். அசையும், அசையாச் சொத்துக்கள் வாங்கி மகிழ்வீர்கள். கைமறதியாக வைத்த நகைகள், முக்கிய ஆவணங்கள் தென்படும். சிலருக்கு இடப்பெயர்ச்சி ஏற்படும். திருமணம் கூடி வரும். புத்திர பிராப்தம் கிடைக்கும். புதிய வேலை வாய்ப்பு மன நிறைவைத் தரும். இழந்த பதவி தேடி வரும். பூர்வீகச் சொத்தில் நிலவி வந்த சர்ச்சைகள் முடிவுக்கு வரும். திருமணத்திற்கு நல்ல வரன் அமையும். அரசியல்வாதிகளுக்கு ஆதாயமான காலம். 28.11.2026 அன்று காலை 7.22க்கு சந்திராஷ்டமம் ஆரம்பிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் தேவை. கொடுக்கல் வாங்கல்களில் சிந்தித்து செயல்பட வேண்டும். பௌர்ணமி அன்று குலதெய்வத்தை வழிபடவும்.
திட்டமிட்டு செயல்பட்டு வெற்றி அடைய வேண்டிய வாரம். ராசியை நோக்கி ராகு பகவான் நெருங்கிக் கொண்டு இருக்கிறார். புதிய பிரம்மாண்ட எண்ணங்கள் உதயமாகும். வாழ்க்கையை ரசித்து வாழ வேண்டும் என்ற ஆர்வம் அதிகமாகும். எதிர்காலம் பற்றிய புதிய சிந்தனைகள் அதிகமாகும். கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியும். வரவும் செலவும் சமமாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். சிலருக்கு வெளியூர் அல்லது வெளி மாநிலம் சென்று வேலை பார்க்கும் அமைப்பு ஏற்படும். அரசு சம்பந்தப்பட்ட முயற்சிகளில் சாதகமான பலன் உண்டு. அடிமைத் தொழிலில் இருக்கும் சிலருக்கு சொந்தத் தொழில் ஆர்வம் பிறக்கும். திரைப்பட கலைஞர்களுக்கு தடைகளைத் தாண்டிய வெற்றி உண்டு. பழைய வழக்குகள் மீதான வழக்கு விசாரணை மீண்டும் தலை தூக்கும். சகோதரத்திற்கு கொடுத்த பணம் வசூலாகும். சிலர் வீட்டை புதுப்பிக்கலாம். காது,மூக்கு, தொண்டை தொடர்பான உடல் உபாதைகள் சிரமம் தரும். பெண்களுக்கு அழகு, ஆடம்பர பொருட்கள், தங்க நகைகள் கிடைக்கும். பௌர்ணமி அன்று இளநீர் அபிசேகம் செய்து சிவனை வழிபடவும்.
அயராத உழைப்பும் முயற்சியும் பலன் தரும் சாதகமான வாரம். ராசியை விட்டு ராகு வெகு விரைவில் வெளியேறப் போகிறார். எதிர்காலம் பற்றிய பயம் விலகி மனதில் தைரியம் குடிபுகும். தொழிலில் இருந்து வந்த தடை தாமதங்கள் அகலும். தந்தையின் அரசு வாரிசு வேலை கிடைக்கும். குடும்ப உறவுகளிடம் நிலவி வந்த சங்கடங்கள் மறையும். குலத்தொழில் செய்பவர்களின் புகழ், அந்தஸ்து, கவுரவம், பணபலம் உயரும். புதிய எதிரிகள், நோய் தாக்கம் உருவாகும். வாழ்க்கை துணையின் வேலை நிரந்தரமாகும். கமிஷன் அடிப்படையில் தொழில் புரிபவர்களுக்கு அதிகப்படியான நன்மைகள் உண்டு. எதிர்காலத் தேவைக்கான இன்சூரன்ஸ் பாலிசி அல்லது நலத்திட்டங்களில் சேமிப்பு போன்ற சுப செலவுகள் அதிகரிக்கும். பிள்ளைகள் கல்விக்காக இடம் பெயரலாம். திருமணக் கனவு நனவாகும். குழந்தை பாக்கியம் கிட்டும். உத்தியோகத்தில் விரும்பிய இடமாற்றம் ஊதிய உயர்வு உண்டு. மாமியார் மருமகள் கருத்து ஒற்றுமை மேம்படும். மாணவர்களுக்கு கல்வியில் நாட்டம் அதிகமாகும். பௌர்ணமி அன்று பால் அபிசேகம் செய்து சிவ வழிபாடு செய்யவும்.
பல விதமான நற்பலன்கள் மகிழ்ச்சியில் ஆழ்த்தும் வாரம். ராசியில் உள்ள சனி பகவான் மீது செவ்வாயின் எட்டாம் பார்வை பதிகிறது. இழந்த சந்தோஷம் மீண்டும் துளிர்விடும். புதிய தொழில் முயற்சிக்கு தேவையான நிதியுதவி கிடைக்கும். அஷ்டமாதிபதி சுக்கிரன் ஆட்சி பலம் பெறுவதால் பெண்கள் மற்றும் பொருள் பணம் சார்ந்த விசயத்தில் எச்சரிக்கையாக செயல்பட வேண்டும். அக்கம் பக்கத்தினருடன் இருந்து வந்த கருத்து வேற்றுமை மாறும். எடுக்கப்பட்ட முயற்சிக்கான முழு பலனும் அங்கீகாரமும், வெற்றியும் உண்டு. நாணயம் நீடிக்கும். அரசியல்வாதிகளுக்கு பொதுஜன ஆதரவு அதிகரிக்கும். பெண்களுக்கு பிறந்த வீட்டுச் சீதனம் மகிழ்ச்சியைத் தரும். ஆரோக்கியத்தில் சிறு சுணக்கம் உண்டாகும். திருமணத் தடை நீங்கும். அடமானச் சொத்துக்கள் மீண்டு வரும். பழைய வாகனத்தை கொடுத்து விட்டு புதிய வாகனம் வாங்கலாம். அரசு வேலைக்கு முயற்சி செய்யும் சிந்தனை தோன்றும். அரசிடமிருந்த வீடு, வீட்டு மனை அல்லது வீடு கட்டத் தேவையான நிதியுதவி கிடைக்கும். சில சமூக ஆர்வலர்களுக்கு அரச கவுரவம் கிடைக்கும்.வயது முதிர்ந்தவர்களுக்கு அரசின் உதவித் தொகை கிடைக்கும்.பௌர்ணமி அன்று அன்னதானம் வழங்கவும்.