2026 வார ராசிபலன்- தனுசு, மகரம், கும்பம், மீனம்

தொழில் வியாபாரத்தில் போட்டிகள் நிலவினாலும் உங்களின் தனித்தி றமையால் சமாளிப்பீர்கள்.
rasipalan
Published on: 

தனுசு

பாக்கிய பலன்கள் மிகுதியாகும் வாரம். தனுசு ராசிக்கு பாக்கிய ஸ்தான அதிபதியான சூரியன் பத்தாம் இடமான தொழில் ஸ்தானத்தில் சஞ்சரிப்பது தர்மகர்மாதிபதி யோகமாகும். ஒரு ஜாதகத்தில் ஒன்பதாம் இடமான பாக்கிய ஸ்தானத்தில் ஜாதகர் பல பிறவியில் செய்த நல்ல தீய வினைகளின் படி அனுபவிக்க வேண்டிய நல்ல தீய பலன்கள் அடங்கி இருக்கும். அதில் நிகழ்கால பிறவியில் அடைய வேண்டிய பலன்களை பத்தாமிடமான கர்ம ஸ்தானம் சொல்லும். அதன்படி தற்போது பத்தாம் இடத்தில் சூரியன் சஞ்சரிப்பதால் இந்தப் பிறவியில் அடைய வேண்டிய அனைத்து நல்ல பலன்களும் உங்களைத் தேடி வரும். தொழில் நிலைக்குமா? வேலை பறிபோகுமா? கடன் தீருமா? என்ற பயத்தில் இருந்து மீண்டு நிம்மதியாக தூங்குவீர்கள். தொழில் வியாபாரத்தில் போட்டிகள் நிலவினாலும் உங்களின் தனித்தி றமையால் சமாளிப்பீர்கள். பொன், பொருள், ஆடம்பரப் பொருள் சேர்க்கை அதிகரிக்கும். நவராத்திரி காலங்களில் பள்ளி மாணவர்களுக்கு இயன்ற தான தர்மம் வழங்கவும்.

மகரம்

மன சஞ்சலம் அதிகரிக்கும் வாரம். வெகு விரைவில் ராசிக்குள் ராகு பகவானும் ஏழாம் இடத்திற்குள் கேது பகவானும் நுழைப்போகிறார்கள் முயற்சிகளிலும் தடை, தாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. ஆரோக்கிய குறைபாடு அதிகரித்து அதிக வைத்திய செலவு செய்ய நேரும். தொழில் உத்தியோகத்தில் நிலவும் சாதகமற்ற சூழ்நிலையால் மன சஞ்சலம் அதிகரிக்கும். திருமண முயற்சியில் காலம், பணம் என பல விரயங்கள் நடக்கும். சிலருக்கு கோட்ச்சார ரீதியான சர்ப்ப தோஷம் ஏற்படப் போவதால் திருமணம் போன்ற வாழ்க்கையை பாதிக்கும் முக்கிய விஷயங்களில் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். சிலருக்கு முன்னோர் வழி நோய் தாக்கம் உருவாகலாம். சிறிய உடல் உபாதைகளை கண்டு கொள்ளாமல் இருந்தால் பின் நாளில் அதுவே பெரிய பிரச்சினையாக உருவாகும். ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும். நவராத்திரி காலங்களில் பெண் தெய்வங்களுக்கு சர்க்கரைப் பொங்கல் படையலிட முன்னேற்றம் உண்டாகும்.

கும்பம்

சுமாரான வாரம். ராசியில் உள்ள ராகுவிற்கு செவ்வாயின் எட்டாம் பார்வை உள்ளது. பேச்சுகளில் அனுபவம் வெளிப்படும். அதிக உற்சாகமாக இருந்தாலும் உடன் பிறந்தவர்கள் தொடர்பான சில மன உளைச்சல் இருக்கும். சொத்து தகராறு, கருத்து வேறுபாடு போன்றவற்றை சந்திக்க நேரும். பகைகளை வெல்லும் திறன் ஏற்படும். நேர்மையாகவும் கடுமையாகவும் உழைத்தாலும் மேலதிகாரியால் தொந்தரவு கூடும். கண் துடைப்பிற்கான பதவி உயர்வே தவிர பிரயோஜனம் எதுவும் இருக்காது. வாழ்க்கையை பாதிக்கும் தடாலடியான முடிவுகளை எடுப்பதை தவிர்க்கவும். 11.10.2026 அன்று காலை 10.4 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் வீண் செலவுகளை குறைத்து வருமானத்திற்கு ஏற்ப திட்டமிட்டு அகலக்கால் வைக்காமல் நிதானமாக செயல்பட்டால் கடன் இல்லாமல் சமாளிக்க முடியும். புதிய நட்பால் சில சங்கடங்கள் நேரலாம் என்பதால் எச்சரிக்கை தேவை. நவராத்திரி காலங்களில் முதிர்ந்த சுமங்கலிகளிடம் ஆசி பெறவும்.

மீனம்

அறிவாற்றலும், திறமையும் கூடும் வாரம். ராசிக்கு சூரியன் மற்றும் குரு பார்வை இருப்பதால் உங்களின் முயற்சியும் விருப்பங்களும் பலிதமாகும். நீங்கள் அனுபவித்த பிரச்சினைக்கு விடிவு காலமாக இருக்கும். அரசின் உதவிகள், நலத்திட்டங்கள் பயனுள்ளதாக இருக்கும். புதிய தொழில் வாய்ப்புகள், ஒப்பந்தங்கள் கிடைக்கும். முன்னேற்றப் பாதையில் நிலவிய தடைகள் தகறும். உற்றார் உறவினர்களுடன் சுமூகமான உறவு உண்டாகும். இதுவரை நிலவிய மந்த நிலை மாறும். நீண்ட நாள் கனவுகளை நிறைவு செய்து மகிழ்வீர்கள். வருமானம் அதிகரிக்கும். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். 11.10.2026 அன்று காலை 10.04 மணி முதல் 13.10.2026 அன்று இரவு 7.33 மணி வரை சந்திராஷ்டமம் வேலைக்குச் செல்பவர்கள் பிறர் சொல்லக்கூடிய ஆசை வார்த்தைகளை நம்பி தற்போது இருக்கக்கூடிய நல்ல வேலையை இழக்கக்கூடாது. நவராத்திரி காலங்களில் கன்னிப் பெண்களுக்கு ஆடை ஆபரணங்களில் தானம் வழங்கவும்.

‘பிரசன்ன ஜோதிடர்’

ஐ.ஆனந்தி

செல்: 98652 20406

X

Maalai Malar
www.maalaimalar.com