2026 வார ராசிபலன்- சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம்

தாயின் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்
rasipalan
Published on: 

சிம்மம்

நன்மைகள் மிகுதியாகும் வாரம். ராசியை நோக்கி குரு பகவான் அதிசாரமாக வந்து கொண்டு இருக்கிறார். இது சிம்ம ராசியினருக்கு அதிர்ஷ்டத்தை அதிகப்படுத்தும் காலமாகும். ஜென்ம குரு என்ற அடிப்படையில் அவர் செயல்பட்டாலும் அவரின் பார்வை பலன்கள் உங்களை அஷ்டமச் சனியின் இன்னல்களில் இருந்து மீட்டு விடும். குரு தன் வீட்டைத் தானே பார்ப்பதால் பலருக்கு சொந்த வீடு, வாகனம் வாங்கும் பாக்கியம் உண்டாகும். வலது பக்கத்து வீட்டுக்காரருடன் நிலவிய எல்லைத் தகராறு சுமூகமாகும். தாயின் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். தாய்வழிச் சொத்திற்காக தாய் மாமாவுடன் ஏற்பட்ட வழக்கின் தீர்ப்பு சாதகமாகும். அஷ்டமச் சனி முடியும் வரை திருமணம் முயற்சியை தவிர்ப்பது உத்தமம். குடும்பத்தில் சுப நிகழ்வுகள் நடைபெறும். உபரி வருமானத்தை அரசுடைமை வங்கிகளில் சேமிக்க வேண்டும். இளவயதினருக்கு எதிர்பாலினரிடம் மிகுதியான ஈடுபாடு உண்டாகும். நவராத்திரி காலங்களில் கோதுமை உணவு தானம் வழங்கவும்.

கன்னி

விரயங்களை கட்டுப்படுத்த வேண்டிய வாரம். ராசியில் விரயாதிபதி சூரியன் சஞ்சரிக்கிறார். தன ஸ்தான அதிபதி சுக்கிரன் வக்ர கதியில் சஞ்சரிக்கிறார்.கடன் பெறுவதையும் கொடுப்பதையும் தவிர்க்கவும். உத்தியோகஸ்தர்கள் கம்பெனி சார்பாக வெளிநாட்டில் சென்று பணிபுரிகின்ற வாய்ப்பு இருக்கும். குடும்ப உறவுகளுக்காக சகோதர, சகோதரிகளுக்காக சூழ்நிலை கைதியாக விட்டுக் கொடுத்து வாழும் சூழ்நிலை உண்டாகும். உடன் பிறந்தவர்களின் திருமணம் அல்லது அவர்களின் குடும்பத்தை பராமரிப்பது, அவரின் கடனை ஏற்பது அல்லது அவருக்கு கடன் கொடுப்பது என விரயங்கள் மிகுந்து கொண்டே இருக்கும். ஆடம்பரச் செலவையும் கடன் வாங்குவதை தவிர்த்தால் இந்த வாரம் அனைத்து நாட்களும் இன்பமாகவே இருக்கும். யாருக்கும் வாக்கு கொடுக்க வேண்டாம். பிறருக்கு ஆலோசனை வழங்குவதால் மனக்கசப்பு உண்டாகும். நவராத்திரி காலங்களில் சிவசக்தியை வழிபடவும்.

துலாம்

லாபகரமான வாரம். வெகு விரைவில் லாப ஸ்தானத்திற்குள் குரு பகவான் அதிசாரமாக நுழையப் போகிறார். அதற்கான பலன்கள் தற்போது உங்களுக்கு தெரியும். சுய ஜாதகத்திலும் கோச்சாரத்திலும் லாப ஸ்தானத்தில் கிரகங்கள் வரும் போது நன்மையை அதிகம் நடக்கும். வழக்குகளில் வெற்றி உண்டாகும். மூத்த சகோதரத்தால் ஆதாயம் உண்டாகும். அதிர்ஷ்டத்தின் மேல் நம்பிக்கை அதிகரிக்கும்.பலருக்கு குறுகிய காலத்தில் பங்குச் சந்தையில் எதிர்பாராத மிகுதியான பொருள் வரவு உண்டாகும். ஜனன கால ஜாதகத்தில் தசா, புத்தி சாதகமாக இருந்தால் புதிய திருப்புமுனைகள் ஏற்படும். பல வழிகளில் பணம் வந்து பையை நிரப்பும். டல்லான வியாபாரம் துளிர் விடும். சிலருக்கு எதிர்பாலினத்தவரால் வம்பு உண்டாகும். தம்பதிகளின் குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும். பொன், பொருள் சேர்க்கையால் குடும்பத்தில் மகிழ்ச்சியும் சந்தோஷமும் அதிகரிக்கும். நவராத்திரி காலங்களில் அம்பிகைக்கு குங்கும அர்ச்சனை செய்யவும்.

விருச்சிகம்

விரும்பிய மாற்றங்கள் உண்டாகும் வாரம். தொழில் ஸ்தான அதிபதி சூரியன் பதினொன்றாம் இடமான லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். லாப ஸ்தானத்தில் சூரியன் சஞ்சரிப்பதால் சுய ஜாதகரீதியான தோஷங்களும் சாபங்களும் விலகும். திட்டமிட்டு செயல்படுவீர்கள். குடும்பத்தில் சுப காரியங்கள் நடைபெறுவதற்கான சாத்திய கூறுகள் தென்படும். இடமாற்றம், வீடு மாற்றம், வேலை மாற்றம், தொழில் மாற்றம் என அவரவர் தேவைக்கும் வயதிற்கும் ஏற்ற மாற்றங்கள் உண்டாகும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். விரும்பிய பதவி தேடி வரும். பதவி உயர்வு கிடைக்கும். புத்திர பாக்கியம் சித்திக்கும். பல வருடங்களாக தீராத பிரச்சினைகள் முடிவுக்கு வரும். மாதத்தவணையில் பொருட்கள் வாங்குவதைத், தவிர்க்கவும். அக்கம் பக்கத்தில் இருப்பவர்களிடம் அனுசரித்து செல்ல வேண்டும். நவராத்திரி காலங்களில் அம்மனுக்கு மஞ்சள் அபிஷேகம் செய்து வழிபடவும்

‘பிரசன்ன ஜோதிடர்’

ஐ.ஆனந்தி

செல்: 98652 20406

X

Maalai Malar
www.maalaimalar.com