ஆன்மிகம்: இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்

காணாடுகாத்தான் சிவபெருமான் திருக்கல்யாணம்.ஆழ்வார்திருநகரி ஸ்ரீ நம்மாழ்வார் புறப்பாடு.
ஆன்மிகம்: இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்
Published on

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர், திருப்பரங்குன்றம் ஆண்டவர் கோவில்களில் ஊஞ்சல் சேவை. திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் கத்தவால் சமஸ்தான மண்டபம் எழுந்தருளல். காணாடுகாத்தான் சிவபெருமான் திருக்கல்யாணம். திருத்தங்கல் ஸ்ரீ அப்பன் சேஷ வாகனத்திலும், தாயார் தோளுக்கினியானிலும் பவனி. ஆழ்வார்திருநகரி ஸ்ரீ நம்மாழ்வார் புறப்பாடு. சங்கரன்கோவில் கோமதியம்மன் தங்கப் பாவாடை தரிசனம். ராமேசுவரம் பர்வத வர்த்தினியம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளி அம்பாள் தங்கப் பல்லக்கில் புறப்பாடு. கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்த ராஜப் பெருமாளுக்கு காலை திருமஞ்சன சேவை. மாலை ஊஞ்சல் சேவை, மாட வீதி புறப்பாடு.

இன்றைய பஞ்சாங்கம்

சோபகிருது ஆண்டு, ஆனி-15 (வெள்ளிக்கிழமை)

பிறை: வளர்பிறை

திதி: துவாதசி இரவு 10.40 மணி வரை பிறகு திரயோதசி

நட்சத்திரம்: விசாகம் நண்பகல் 1.52 மணி வரை பிறகு அனுஷம்

யோகம்: சித்தயோகம்

ராகுகாலம்: காலை 10.30 மணி முதல் 12 மணி வரை

எமகண்டம்: பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை

சூலம்: மேற்கு

நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை

இன்றைய ராசிபலன்

மேஷம்-வாழ்வு

ரிஷபம்-லாபம்

மிதுனம்-வரவு

கடகம்-ஆர்வம்

சிம்மம்-துணிவு

கன்னி-உறுதி

துலாம்- புகழ்

விருச்சிகம்-நலம்

தனுசு- பாராட்டு

மகரம்-உதவி

கும்பம்-நட்பு

மீனம்-ஓய்வு

ஆன்மிகம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/devotional

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com