

அஷ்ட லக்ஷ்மி வழிபாடு, விஷ்ணு சகஸ்ர நாமம் பாராயணம் செய்வது போன்றவற்றை இந்நாளில் செய்வதால் நவகிரக தோஷங்கள் விலகும் என்பதும் நம்பிக்கை.
இந்து சமய நம்பிக்கைகளின்படி, மனிதர்களின் வாழ்வில் குறையாத செல்வம், செல்வாக்கு, ராஜயோகம் மற்றும் பலவிதமான ஐஸ்வர்யங்களை அருளும் உன்னதமான விரதங்களில் கஜலட்சுமி விரதம் மிகச் சிறப்பான இடத்தைப் பெற்றுள்ளது.
இந்து மதத்தில் அஷ்டலட்சுமிகளின் வழிபாடு மிக முக்கியமான இடத்தைப் பெற்றுள்ளது. இவர்களில் செல்வம், ராஜயோகம், தைரியம் மற்றும் வலிமை ஆகியவற்றின் அதிபதியாகப் போற்றப்படுபவர் அன்னை கஜலட்சுமி. இவரை வேண்டி மேற்கொள்ளப்படும் கஜலட்சுமி விரதம் மிகவும் சக்தி வாய்ந்ததாகவும், வாழ்வில் குறையாத ஐஸ்வர்யத்தைத் தரக்கூடியதாகவும் நம்பப்படுகிறது.
காமாட்சி அம்மன் விளக்கில் இருப்பது கஜலட்சுமி தாயார் தான். இருபுறமும் யானைகள் விசிறி விடுவது போல இருக்கும் இந்த கஜலட்சுமி தாயாரை சர்க்கரைப் பொங்கல் நிவேதனம் வைத்து வழிபட்டால் கேட்ட வரமெல்லாம் கிடைக்கும்.
விரதம் இருக்கும் நாளில் அதிகாலையில் நீராடி, பூஜை அறையில் மரப்பலகை ஒன்றில் சிகப்பு அல்லது மஞ்சள் நிற துணி விரித்து அதில் பச்சரிசி பரப்பி தாமரை கோலம் போட்டு, அதன் மீது அஷ்ட லக்ஷ்மி படம் அல்லது கஜலட்சுமி படத்தை வைத்து அவருக்கு தாமரை மலர் சூட்டி கஜலட்சுமி விளக்கை வைத்து அதில் நெய் தீபமிட்டு தூப, தீப, ஆராதனைகள் காண்பித்து மூல மந்திரங்களை உச்சரித்து முறையாக உங்கள் தேவைகளை வேண்டி வணங்கிக் கேட்டுக் கொண்டால் வீடு, மனை, தோட்டம் போன்ற செல்வங்களையும், செல்வம், புகழ், ஆளுமை திறன் ஆகிய வரங்களையும் வாரி வழங்குவாள்.
ஆதிசங்கரர் அருளிய கனகதார ஸ்தோத்திரம், மகாலட்சுமி அஷ்டகம், லட்சுமி அஷ்டோத்திரம், ஸ்ரீ சூக்தம் ஆகிய ஸ்தோத்திரங்களை பாடுவது சிறப்பு. அஷ்ட லக்ஷ்மி வழிபாடு, விஷ்ணு சகஸ்ர நாமம் பாராயணம் செய்வது போன்றவற்றை இந்நாளில் செய்வதால் நவகிரக தோஷங்கள் விலகும் என்பதும் நம்பிக்கை.